-->

யார் இந்த யோகி பாபு? யோகி பாபு பற்றிய சில சுவாரசிய விஷயங்கள்

யோகி பாபு சினிமாவுக்கு எப்படி வந்தார்

யோகி பாபு

சினிமாவில் நடிக்க அழகுதான் முக்கியம் என்பதை தாண்டி, திறமை மட்டும் இருந்தால் போதும் முன்னேறிவிடலாம் நிரூபித்த மற்றுமொரு காமெடி நடிகர் யோகி பாபு. சுப்ரமணியம் சிவா இயக்கத்தில், இவர் யோகி படம் மூலம் தமிழில் அறிமுகமானர் பாபு. அந்த படத்தின் பெயரே பின்னாளில் இவருக்கு அடையாளமாக மாறி யோகி பாபுவாக எல்லோராலும் அறியபடுகிறார்.

சினிமாவுக்கு வந்த கதை

தற்போது வருகிற எல்லா படங்களிலும் தவறாமல் இடம் பிடித்து நடித்து விடுகிறார் யோகி பாபு. குண்டான, முரட்டுத்தனமான உடம்பு, அப்பாவித்தனமான முகம், சுருட்டையான தலைமுடி, என வித்தியாசமான தோற்றத்தில் இருக்கும் யோகி பாபு சினிமாவுக்கு வந்த கதையே சுவாரசியமானது. இவர் சிறு வயதில் ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்று ஆசைப்பட்டார். ஏனெனில் இவரது தந்தையும் ஒரு ராணுவ வீரர் ஆவார். ஒரு முறை சாலை விபத்து ஏற்பட்டு அவரின் முதுகில் காயம் ஏற்பட ராணுவ கனவு சிறுது சிறிதாக களைந்து விட்டது.

யோகி பாபு காமெடியன்

வேடிக்கை பார்க்க சென்றவர்

அடுத்து வாழ்கையில் என்ன செய்வது என்றே தெரியாமல் தவித்த இவர் ஒரு முறை லொள்ளுசபா ஷ¨ட்டிங்கை வேடிக்கை பார்க்க சென்றுள்ளார். அப்போது ஷூட்டிங் ஸ்போட்ல் ஆட்கள் குறைய வேடிக்கை பார்க்க சென்ற இவரை பிடித்து நடிக்க வைத்து விட்டார்கள். அதுதான் இவர் கேமரா முன்னால் நின்ற முதல் அனுபவம். பின்பு சினிமா ஆசை துளிர்விட சென்னையில் வாய்ப்பு தேடி அலைந்துள்ளார். ஆனால் வாய்ப்பு தராமல் இவர் உருவத்தை பார்த்து கிண்டல் செய்தவர்கள்தான் ஏராளம்.

முன்னணி காமெடியன்

பின்பு எப்படியோ சுப்ரமணியம் சிவா இயக்கிய யோகி படத்தில் அமீரின் அடியாளாக அறிமுகம் ஆனார். அதிலிருந்து யோகி பாபு ஆனார். தொடர்ந்து வில்லன் ரோல்களில் நடித்தவர் கலகலப்பு, பட்டத்து யானை, மான் கராத்தே, யாமிருக்க பயமேன், காக்க முட்டை போன்ற  படங்களில் காமெடி ரோலில் நடித்து மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். தனது உருவத்தை பார்த்து கிண்டல் செய்தவர்களை, தனது நடிப்பின் மூலம் முக்கின் மேல் விரல் வைக்க செய்து விட்டார்.

நன்றி

தற்போது, சத்தமே இல்லாமல் நூறாவது படத்தை நோக்கி முன்னேறியிருக்கிறார். இது குறித்து அவர் கூறியதாவது: இது நானே எதிர்பார்க்காத ஒரு விஷயம். சினிமாவில் இன்னும் நிறைய சாதிக்க வேண்டும் என நினைக்கிறேன். ரசிகர்கள் இல்லாமல் எந்த நடிகனும் இல்லை, ரசிகர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி என்றார்.

உங்களுக்கு யோகி பாபு நடித்த படங்களில் பிடித்தது எது? இது குறித்த உங்கள் கருத்துகளை கமெண்ட் பாக்ஸ்ல் பதிவிடுங்கள். மேலும் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் பெற subscribe செய்து எங்களுடன் இணைந்திடுங்கள்


Previous Post Next Post