சென்னை சூப்பர் கிங்ஸ்
ஐபிஎல் சீசனின் இன்றைய ஆட்டத்தில் தோணி தலைமையிலான சென்னை
சூப்பர் கிங்ஸ் அணியும், கனே வில்லியம்சன் தலைமையிலான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணியும் மோத உள்ளன. சிஎஸ்கே
மற்றும் ஐதராபாத் அணிகள் விளையாடிய 4 போட்டிகளில் 3ல் வெற்றி, ஒன்றில் தோல்வி அடைந்துள்ளன. இந்த தொடரில்
மிகவும் பலம் வாய்ந்த, வெற்றிகரமான அணிகளாக இந்த இரண்டு
அணிகளும் இருக்கின்றன.
வெற்றி பயணம்
இந்த தொடரில் சிஎஸ்கே அணி முதல்
போட்டியில் மும்பையை வீழ்த்தியது. கொல்கத்தா, ராஜஸ்தான் அணிகளையும் வீழ்த்திய
சென்னை, பஞ்சாப் அணியிடம் கடைசி ஓவரில் வெற்றிக்கு அருகில் வந்து தோல்வி அடைந்தது.
ஐதராபாத் அணி, ராஜஸ்தான், மும்பை,
கொல்கத்தா அணிகளுக்கு எதிராக ஹாட்ரிக் வெற்றியைப் பதிவு செய்தது,
பஞ்சாப் அணியிடம் மட்டும் தோல்வி அடைந்தது.
அசுர பலம்
சென்னை அணியில் வாட்சன், ரெய்னா, தோணி, பிராவோ, பில்லிங்க்ஸ், என
உலகின் தலை சிறந்த பேட்ஸ்மேன்களுடன் பேட்டிங்கில் அசுர பலத்துடன் உள்ளது.
பௌலிங்கில் சஹர், தாகூர், வாட்சன், ஜடேஜா, பிராவோ, மிரட்ட காத்திருக்கின்றனர்.
நாங்களும் சளைத்தவர்கள் அல்ல என்பது போல ஐதராபாத்
அணியிலும் புவனேஷ்வர்குமார், சித்தார்த்
கவுல், ரஷித்கான் உள்ளிட்டோர் பந்து வீச்சில் மிரட்ட
காத்திருக்கின்றனர்.
ஷிகர் தவான்
ஐதராபாத்தின் பிரதான பலமே பந்து வீச்சு தான்.
அதனால் அவர்கள் பந்து வீச்சு மூலம் சென்னை அணியின் வலுவான பேட்டிங் வரிசை
சீர்குலைக்க வியூகங்களை தீட்டி வருகிறார்கள். பஞ்சாப்புக்கு
எதிரான ஆட்டத்தின் முழங்கையில் காயம் அடைந்து வெளியேறிய ஷிகர் தவான் இந்த
ஆட்டத்தில் விளையாடுவாரா? என்பது சந்தேகம் தான். எனவே இந்த போட்டி
ரசிகர்களுக்கு பெரும் விருந்தாக அமையும் என்பதில் சந்தேகம் இல்லை.
சாதனை
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் மொத்தமாக் 49 சதங்கள் பதிவு செய்யபட்டுள்ளன. இன்று நடக்கும் போட்டியில், 50வது சதத்தை அடிக்கும் வாய்ப்பு இரண்டு அணிகளுக்குமே கிடைத்துள்ளது. இந்த
சாதனையைப் புரியப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.