-->

ஹைதராபாத்திற்கு எதிராக சென்னை அணி த்ரில் வெற்றி

சென்னை சூப்பர் கிங்க்ஸ் ஹைதராபாத்திற்கு எதிராக வெற்றி

ஐபிஎல்
ஐபிஎல் தொடரின் இன்றைய ஆட்டத்தில் சென்னை, ஹைதராபாத் அணிகள் மோதின. புள்ளி பட்டியலில் 2வது இடத்தில் உள்ள சென்னை அணிக்கும் 4வது இடத்தில் ஹைதராபாத் அணிக்கும் இடையில் இன்று போட்டி நடந்தது. இரு அணிகளும் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கின.

மாற்றங்கள்
இரண்டு அணிகளிலும் மாற்றங்கள் செய்யப்பட்டு இருந்தன. ஹைதராபாத் அணியில் காயம் காரணமாக ஷிகர் தவான் இடம்பெறவில்லை, அவருக்கு பதில் ரிக்கி களமிறங்கினார். சென்னை அணியில் இம்ரான் தாஹிர்க்கு பதிலாக டு பிளசிஸ் அணியில் சேர்க்கப்பட்டார்.

ரெய்னா, அம்பதி ராயுடு ஜோடி
இந்த போட்டியில் ஹைதராபாத் அணி டாஸ் வென்று சென்னையை பேட்டிங் செய்ய அழைத்தது. ஹைதராபாத் அணியின் பந்து வீச்சாளர்கள் மிகவும் கட்டு கோப்பாக பந்து வீசினர். இதனால் சென்னை அணி ரன்கள் எடுக்க திணறியது. அனுபவ வீரர்கள் வாட்சன், மற்றும் டு பிளசிஸ் தங்கள் விக்கெட்டை விரைவாக இழந்து வெளியேறினர். பின்னர் ஜோடி சேர்ந்த ரெய்னா, அம்பதி ராயுடுவும் பொறுமையாகவே விளையாடினர். 1௦ ஓவர்கள் வரை சென்னை அணியின் ரன்ரேட் அமை வேகத்திலே சென்று கொண்டிருந்தது.

அம்பதி ராயுடு அதிரடி
1௦ ஓவர்களுக்கு பிறகு அதிரடி ஆட்டத்தை ஆரம்பித்தார் ராயுடு. அவருக்கு ரெய்னா நன்றாக ஒத்துழைப்பு கொடுத்தார். அம்பதி ராயுடு அதிரடியாக ஆடி, 37 பந்தில் 79 ரன்கள் எடுத்தார். இதில் 4 சிக்ஸ், 9 பவுண்டரி அடக்கம். அதேபோல் ரெய்னாவும் தன பங்குக்கு, 43 பந்தில் 54 ரன்கள் எடுத்தார். கடைசி நேரத்தில் களமிறங்கிய டோணி 12 பந்தில் 25 ரன்கள் எடுத்தார். இதனால் சென்னை அணி 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டை இழந்து 182 ரன்கள் என்கிற சவாலான இலக்கை ஹைதராபாத்திற்கு நிர்ணயித்தது.

ஹைதராபாத் தோல்வி
பின்னர் களமிறங்கிய ஹைதராபாத் ஆரம்பத்திலயே 3 விக்கெட்டை இழந்து தடுமாறியது. பின்னர் இணைந்த வில்லியம்சன், சாகிப் ஜோடி விக்கெட்டை இழக்காமல் பொறுமையாக விளையாடினர். சாகிப் 24 ரன்களில் ஆட்டமிழந்தார். கேப்டன் வில்லியம்சன் 84 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். கடைசி கட்டத்தில் அதிரடி காட்டிய யூசுப் பதான் 45 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். நிர்ணயிக்கப்பட்ட 2௦ ஓவரில் ஹைதராபாத் அணி 178 ரன்கள் சேர்த்து 4 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Previous Post Next Post