ஹன்சிகா
நடிகை ஹன்சிகா சினிமாவுக்கு நடுவே சமூக
சேவையிலும் ஈடுபட்டு வருகிறார். பிற நடிகைகளை போல சம்பாதித்த பணத்தை ரியல்
எஸ்டேட்டில் முதலீடு செய்வது, வீடுகள்
வாங்குவது, வியாபாரம் செய்வது என்று இருப்பவர்களுக்கு
மத்தியில் தான் வாங்கும் சம்பளத்தில் ஒரு பகுதியை ஆதரவற்றோருகளுக்கு என ஒதுக்கி
உதவி செய்து வருகிறார்.
27 வயதில் 30 குழந்தைகள்
தன்னுடைய ஒவ்வொரு பிறந்தநாளின் போதும் ஒரு
ஆதரவற்ற குழந்தையை தத்தெடுத்து வருகிறார். இப்போது அந்த குழந்தைகள் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்துள்ளது. 27 வயதில் 30 குழந்தைகளுக்கு
தாயாகியுள்ளார். பெற்றால் தான் பிள்ளையா, இவர்கள் அனைவரும்
என் பிள்ளைகளே என்கிறார் ஹன்சிகா.
பாக்கியம்
இதுகுறித்து ஹன்சிகா மேலும் கூறியதாவது, நான்
குழந்தைகள் பெற்றுக்கொள்ளாமலேயே ஆதரவில்லாத 30 குழந்தைகளுக்கு
தாயாகி இருக்கிறேன். இது எனக்கு கிடைத்த மிக பெரிய பாக்கியம்.
பெற்ற அம்மாவை பார்க்கமுடியாத அந்த குழந்தைகள் என்னைத்தான் அம்மாவாக
பார்க்கிறார்கள்.
ஒவ்வொரு குழந்தையும்
என்னை அம்மா என அழைக்கும்போது நான் உள்ளம் உருகுகிறேன். அவர்களை பார்த்து
கொள்வதற்கு பணத்தை மட்டும் ஒதுக்கிவைத்து விட்டு நான் சும்மா இருப்பது இல்லை. எனக்கு
படப்பிடிப்பு இல்லாத நாட்களில் நான் அவர்களுடன் இருக்கவே ஆசைபடுகிறேன்.
முதியோர் இல்லம்
முதியோர் இல்லம்
தன்னை பெற்ற பெற்றோரை பார்க்காத முடியாத அந்த குழந்தைகளுக்கு
இன்னும் நிறைய செய்ய வேண்டும். ஆதரவற்ற முதியோர்களுக்காக நான் புதிய முதியோர்
இல்லம் ஒன்றையும் கட்டி வருகிறேன். குழந்தைகளுடன் அவர்களையும் பராமரிக்க முடிவு
செய்துள்ளேன் என்றார் ஹன்சிகா.
ஹன்சிகாவின் இந்த செயல்
குறித்து உங்கள் கருத்து என்ன? உங்கள் கருத்துகளை கமெண்ட்
பாக்ஸ்ல் தெரிவியுங்கள், மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற SUBSCRIBE செய்து எங்களுடன் இனைந்திடுங்கள்.