மித்ரா குரியன்
சன் டிவியில் தினமும் ஒளிபரப்பாகும் 'அழகு' சீரியலில் ‘ஐஸ்வர்யா’ என்னும்
கதாபாத்திரத்தில் நாயகியாக நடித்து வருபவர் நடிகை ‘மித்ரா குரியன்’. இளைய தளபதி
விஜய் நடித்த 'காவலன்' படத்தின் மூலம் நமக்கு அறிமுகமானவர். இவர் 1989ம் ஆண்டு கேரளாவில் பிறந்த இவர் தனது திரைபயணத்தை ஒரு துணை
நடிகையாக தொடங்கினார்.
காவலன்
முதலில் மலையாளத்தில் மயோகம் என்னும் படத்தில் நடித்தார். பின்பு
தமிழில் நடிகர் பிரசன்னா ஜோடியாக சாது மிரண்டால் என்னும் படத்தில் நடித்தார்.அதன்
பிறகு சூரியன்,சட்டக்கல்லூரி,காவலன்,கந்தா,போன்ற படங்களில் நடித்தார்.
இதில் விஜய்யின் காவலன் படத்தில் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு நன்கு
அறிமுகமானார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக அசின் நடித்திருப்பார். அந்த
படத்தில் அசினின் தோழியாக நடித்தவர மித்ரா குரியன். படத்தின் இறுதியில் இவர்தான்
நடிகர் விஜய்யை திருமணம் செய்து கொள்வார்.
காதல் மற்றும்
திருமணம்
ஒரு தடவை வெளிநாட்டில் நடந்த கலை நிகழ்ச்சிக்கு சென்றபோது உடன்
சென்ற கொச்சியைச் சேர்ந்த இசை கலைஞர் பிரான்சிஸ் வில்லியம்சுக்கும், மித்ராவுக்கும்
காதல் உண்டானது. பிறகு அவரை திருமணம் செய்து கொண்டார். மேலும் இவர் நடிகை நயன்தாராவின்
நெருங்கிய சொந்தக்காரரும் ஆவார்.
அழகு
கோலிவுட்டில் சில காலம் சரியான வாய்ப்பு கிடைக்காமல் ஒதுங்கி
இருந்த மித்ரா, தொடர்ந்து படங்கள் கிடைக்காதலால் தமிழ் சீரியல்களில் நடிக்க
தொடங்கிவிட்டார்.
தற்போது ‘ரேவதி, தலைவாசல் விஜய்’
ஆகியோர் நடிக்கும் ‘அழகு’ சீரியலில்
அவர்களின் பெண்ணாக தனது ஆபாரமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்க
தொடங்கிவிட்டார் என்றே சொல்லலாம்.
உங்களுக்கு மித்ரா என்னும் ஐஸ்வர்யாவின் நடிப்பு
பிடித்திருக்கிறதா? உங்கள் பதிலை கமெண்ட் பாக்ஸ்ல் தெரிவிக்கவும்..
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் பெற subscribe செய்து எங்களுடன் இணைந்திடுங்கள்