சார்லி சாப்ளின்
வாய்விட்டு
சிரித்தால் நோய்விட்டு போகும் என்பார்கள், அப்படி உலகில் அதிக மக்களை சிரிக்க
வைத்த நபர் யார் என்று கேட்டால் நடிகர் சார்லி சாப்ளினை தான் உலகம் கை காட்டும். ஊமைப்படங்கள்
மட்டுமே வெளிவந்த காலத்தில் வசனம் எதுவும் பேசாமல் தன் உடல் அசைவுகளாலே ரசிகர்களை
வயிறு குலுங்க சிரிக்க வைத்தார் சார்லி சாப்ளின். எல்லோரையும் சிரிக்க வைத்த
அவரின் வாழ்க்கை எவ்வளவு சோகங்களால் நிறைந்தது தெரியுமா? சோகம் மற்றும் வறுமையிலும் நம்மை சிரித்த வைத்த சாப்ளினை
பற்றி சிறிது தெரிந்துகொள்வோம்.
பிறப்பு
ஏப்ரல் 16, 1889ம் ஆண்டு ‘சார்லஸ் சாப்ளின் - ஹன்னா சாப்ளின்’ தம்பதிக்கு மகனாக பிறந்தார். இதற்கிடையில், சாப்ளினின்
தந்தை குடிப் பழக்கத்தால் சாப்ளினின் பன்னிரண்டாவது வயதில் இறந்தார். இதனால் இவர்
தாயும் பெரும் மன உளைச்சலுக்கு உள்ளாகி மன நலம் பாதிக்கப்பட்டார். பின்பு இவரும் 1928ஆம் ஆண்டில் இறந்தார்.
தாயும் தந்தையும் அன்புடனும் ஆதரவுடனும் கவனிக்க வேண்டிய குழந்தை
பருவத்தில் சாப்ளினுக்குத் தனிமையே துணையானது.
‘ஹான்வெல்’ என்னும் ஆதரவற்ற சிறுவர்களுக்கான இல்லத்தில்
சாப்ளின் சேர்க்கப்பட்டார். இங்கே சாப்ளின் சந்தித்ததெல்லாம் துயரங்களை மட்டுமே. துன்பங்களை
சகித்துக்கொண்டு சாப்ளின் நாட்களை நகர்த்தினார். அதிகக் கண்ணீர் வடித்த நாட்கள்
இவை எனப் பின்னாளில் சாப்ளின் குறிப்பிட்டுள்ளார். இருந்தாலும் சாதிக்க வேண்டும்
என்கிற எண்ணம் மட்டும் இவருக்குள் ஓடியது.
முதல் நடிப்பு
முதன் முதலில் 1894ஆம் ஆண்டில் மியூசிக் ஹாலில் தனது ஐந்து
வயதிலேயே தாய்க்குப் பதிலாக ஒரு வேடத்தில் நடித்தார். பின்பு சிறு சிறு நாடகங்களில் நடித்து பிழைப்பை ஓட்டினார். 1913-ல் சாப்ளின் கலிஃபோர்னியாவில் உள்ள ;கீஸ்டோன்
ஸ்டுடியோவில்; சேர்ந்தார். ஓரே ஆண்டில் சாப்ளின் அமெரிக்காவின் பிரபலமான நகைச்சுவை
நடிகராக மாறினார். 1917-ல் சொந்தமாக ஸ்டுடியோவைக் கட்டினார். 1917 ஆண்டிலேயே 1 மில்லியன் டாலர் ஊதியம்
பெற்ற உலகின் முதல் நடிகர் இவர்தான்.
பட்டங்கள்
'மேக்கிங் எ லிவிங்’ என்ற தனது முதல் திரைப்படத்தில் ஒரு
கருப்பு கோட்டும், பெரிய தொப்பியும், சிறு மீசையுடன் நடித்தார் பின்னாளில் அதுவே
சாப்ளினின் அடையாளமானது. அவருடைய சிறப்பான நடிப்புகாக எலிசபெத் ராணியார் அவருக்கு 'சர்' பட்டம்
வழங்கி கவுரவித்தார். சாப்ளின் இருமுறை சிறப்பு ஆஸ்கார்
விருதினைப் பெற்றுள்ளார்.
இறப்பு
1977 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று தனது 88-ஆவது வயதில்
காலமானார் சார்லி சாப்ளின். அதுவரை சார்லி சாப்ளினை பார்த்து சிரிக்க மட்டுமே செய்த
உலகம் அன்று அவரை பார்த்து முதன் முறையாக அழுதது. இன்று வாய்விட்டு சிரிக்க
நினைக்கும் மக்கள் சார்லி சாப்ளினின் பழைய படங்களை பார்க்கின்றனர். இது ஒன்றே அந்த
மாபெரும் கலைஞன் இந்த உலகிற்கு விட்டு சென்றிற்கும் மாபெரும் சொத்தாகும்.
சிரிப்பு