-->

ஜாக்கி சான் பற்றிய சில சுவாரசிய விஷயங்கள்

biography of jackie chan

ஜாக்கி சான்
ஏப்ரல் 7, 1954-ல் ஹாங்காங்ககில் பிறந்தார் 'ஜாக்கி சான்'. இன்று அவருடைய 62வது பிறந்தநாள். அவரது இயற்பெயர் 'சான் காங் சாங்'. ஜாக்கி ஒரு மார்ஷியல் ஆர்ட்டிஸ்ட், ஆக்டர், டைரக்டர், தயாரிப்பாளர், ஸ்டன்ட் மேன், சிங்கர் என பல அவதாரங்களை சினிமாவில் எடுத்தவர்.
1960-ல் அவரது சினிமா பயணத்தைத் தொடங்கி இதுவரை 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்திருக்கிறார். படங்களில் இவரின் சண்டைக் காட்சிகளைப் பார்த்து ரசிக்காதவர்களே இருக்கமுடியாது.
படிப்பு
அவர் படிப்புடன் சேர்ந்து தற்காப்புக் கலையான 'குங்ஃபூவையும்' பழகியிருந்தார். தற்காப்புக் கலையில் சிறந்து விளங்கிய ஜாக்கி சானுக்கு படிப்பு ஏறவில்லை. பின்னர் ஒரு வழியாகப் படிப்பை முடித்தார். பின்னர் படங்களில் ஸ்டன்ட் மேனாக வேலைக்கு சேர்ந்தார். தன்னுடைய 17-வது வயதில் 'புரூஸ் லீ' நடித்த 'ஃபிஸ்ட் ஆஃப் ஃபியூரி', 'என்டர் தி ட்ராகன்' படங்களில் அவருக்கு எதிராக நடித்த எதிரிகளுள் ஜாக்கியும் ஒருவர்.
ப்ரூஸ் லீ
ப்ரூஸ் லீயின் மரணத்திற்கு பின் அவரின் இடத்தை ஜாக்கி சான் தான் நிரப்பினார். மக்கள் அவரை `அடுத்த ப்ரூஸ் லீஎன்று அழைத்து மகிழ்ந்தனர். 'ப்ரூஸ் லீ, ஜெட் லீ' போன்றவர்களுக்கு மத்தியில் குங்ஃபூ கலையின் மூலமாக மக்கள் மத்தியில் தனித்து தெரிந்தார்.
குங்ஃபூவை ஆக்ரோஷமான சண்டைக் காட்சிகளுக்கு மட்டுமே பயன்படுத்தி வந்த மற்ற நடிகர்களுக்கு மத்தியில் இவர் சண்டையுடன் காமெடியையும் சேர்த்து  பயன்படுத்தினார்.
ஜாக்கி

விருதுகள்
சின்னச்சின்ன சண்டைக் காட்சிகளுக்குக்கூட டூப் போடும் இன்றைய நடிகர்களுக்கு மத்தியில், தானே அனைத்து ஸ்டன்ட்களையும் ரிஸ்க் எடுத்து செய்வார் ஜாக்கி. 'ட்ராகன் லார்ட்' என்ற படத்தின் சண்டை காட்சிக்காக கின்னஸில் இடம் பெற்றார். மேலும் 2016ம் ஆண்டு 'ஆஸ்கர்' விருதையும் வாங்கியுள்ளார்.
பெயர் காரணம்
ஜாக்கி படிக்கும் காலத்தில் கட்டுமானப் பணியாளராக பணிபுரிந்து வந்தார். அவரை ஜாக்என்னும் அவரது சக பணியாளர் மூலம் ஜாக்கிக்கு "லிட்டில் ஜாக்" என்று செல்லப் பெயர் வந்தது. அதையே அவர் "ஜாக்கி" என்று சுருக்கி பின்னாளில் அவரது பெயரை ஜாக்கி சான்என்று மாற்றிக்கொண்டார், இன்றுவரை அதுவே நிலைத்திருக்கிறது. இன்று அவருடைய பிறந்தநாள், அவருடைய பிறந்தநாளில் நாமும் அவரை வாழ்த்துவோம்.
ஜாக்கி சானிடம் உங்களுக்கு பிடித்தது எது? உங்கள் பதிலை கமெண்ட் பாக்ஸ்ல் தெரிவியுங்கள்.
இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் பெற SUBSCRIBE செய்து எங்களுடன் இணைந்திடுங்கள்.


Previous Post Next Post