சென்னை சூப்பர் கிங்ஸ்
பஞ்சாப் மாநிலம் மொகாலியில் இன்று இரவு 8 மணிக்கு நடைபெறும் ஆட்டத்தில் டோனி தலைமையிலான
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி எதிர்
கொள்கிறது.
ரெய்னா இல்லை
சென்னை அணி மும்பை, மற்றும் கொல்கத்தா அணிகளை வென்று
‘ஹாட்ரிக்’ வெற்றி
பெறும் ஆர்வத்துடன் இருக்கிறது. காயம் காரணமாக ரெய்னா இன்றைய ஆட்டத்தில்
விளையாடமாட்டார். பஞ்சாப் அணி தனது தொடக்க ஆட்டத்தில் டெல்லி அணியை வீழ்த்தியது.
அடுத்த ஆட்டத்தில் விராத் கோலியின் பெங்களூர் அணியிடம் தோற்றது. இன்றைய ஆட்டத்தில் சென்னையை வீழ்த்தி 2-வது வெற்றியை பெறும் முனைப்பில் பஞ்சாப் அணி உள்ளது.
அஸ்வின்
இதுவரை நடந்த ஐபிஎல் போட்டிகளில் தோணியின் தலைமையின்
கீழ் சென்னை அணிக்காக விளையாடிய அஷ்வின் இந்த சீசனில் பஞ்சாப் அணியின் கேப்டனாக
விளையாடுகிறார். அஸ்வின் தாய்மையின் கீழ் பஞ்சாப் அணி ஒரு வெற்றியையும், ஒரு தோல்வியையும் பெற்றுள்ளது. இதனால் இன்றைய
போட்டி அதிக அளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கிரிஸ் கெயில்
இந்த ஐபிஎல் தொடரில் பஞ்சாப் அணியின் கே எல் ராகுல் நல்ல
பார்மில் இருக்கிறார். தான். முதல் போட்டியில் வெறும் 14 பந்துகளில் 50 ரன்கள்
எடுத்தார். அடுத்த போட்டியில் 47 ரன்கள் எடுத்தார். சென்னை
அணிக்கு இவர் பெரும் சவாலாக இருப்பார் என கூறப்படுகிறது. மேலும் கடந்த இரு
போட்டிகளில் விளையாடாத அதிரடி மன்னன் ‘கிரிஸ் கெயில்’ இன்றைய போட்டியில் இடம்
பெற்றால் சென்னை அணிக்கு பெரும் தலைவலி ஆரம்பம் என்றே சொல்லலாம். சுழலில் அஷ்வின்,
முஜீப் உர் ரஹ்மான், அக்சர் பட்டேல் ஆகியோர்
மிரட்ட காத்திருக்கிறார்கள்.
வியூகம்
கடந்த காலங்களில் அஷ்வின் சென்னை அணியில் விளையடியதால்
சென்னை வீரர்களின் பலம் என்ன, பலவீனம் என்ன என்பது அஸ்வினுக்கு அத்துப்படி. இதனால் சென்னை
வீரர்களுக்கு எதிராக அவர் வியுகம் வகுப்பார் என கூறப்படுகிறது. இதனால் இன்றைய
போட்டி சுவரசியமாக இருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
அஷ்வினின் வியூகத்தை தோணி உடைப்பாரா? உங்கள் பதிலை கமெண்ட் பாக்ஸ்ல்
தெரிவியுங்கள். மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.
இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற subscribe செய்து எங்களுடன் இணைந்திடுங்கள்