-->

10 லட்ச ருபாய் பரிசை வென்ற ராக்ஸ்டார் ரமணியம்மாள்

ராக்ஸ்டார் ரமணியம்மாள்
சரிகமப
ஜீ தமிழ் டிவியில் கடந்த சில மாதங்களாக ஒளிபரப்பான பிரபல நிகழ்ச்சி சரிகமப’. இந்நிகழ்ச்சியில் பல திறமையான இளைஞர்கள் மற்றும் இளம்பெண்கள் இருந்தாலும் அனைவரையும் கவர்ந்தவர் ‘ராக்ஸ்டார்’ என அழைக்கப்படும் ரமணியம்மாள் தான். சாதிக்க வயது ஒரு தடையில்லை என்பதற்கு ஒரு உதாரணம் இந்த ரமணியம்மாள். 63 வயதிலும் எல்லோராலும் சாதிக்க முடியும் என்று நம்பிக்கையை ஏற்படுத்தியவர்.
இறுதி போட்டி
'சரிகமப' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டிக்குத் வர்ஷா, ஸ்ரீநிதி, ஜஸ்கரன், சஞ்சய், ரமணியம்மாள் என ஐந்து போட்டியாளர்கள் தேர்வாகியிருந்தனர். நேற்று சென்னை நேரு விளயாட்டு அரங்கில் இந்நிகழ்ச்சியின் இறுதி போட்டி நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக கவிஞர் வைரமுத்து மற்றும் யுவன் ஷங்கர் ராஜா ஆகியோர் பங்கேற்றனர். இதில் வர்ஷா என்ற பெண் டைட்டில் வின்னர் ஆனார். இவருக்கு 40 லட்சம் மதிப்புள்ள வீடு பரிசாக வழங்கப்பட்டது.
ரமணியம்மாள்
பெரிதும் எதிர்பார்க்கபட்ட ரமணியம்மாள் இரண்டாவது பரிசை வென்றார். இவருக்கு 4 லட்சம் ருபாய் மதிப்புள்ள காசோலையும், ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள விவசாய நிலம் மற்றும் மேலும் ரூபாய் 1 லட்சம் சிறப்பு பரிசும் வழங்கப்பட்டது. சஞ்சய், மற்றும் ஸ்ரீநிதி அடுத்ததடுத்த பரிசுகளை வென்றனர்.
சரிகமப ரமணியம்மாள்

மகிழ்ச்சி
பரிசை வென்ற ரமணியம்மாள் இந்த பரிசால் தான் மிகவும் மகிழ்ச்சியடைவதாகவும், மேலும் இந்த பரிசை தன்னுடைய பேரப்பிள்ளைகளுக்கு வழங்குவேன் என்றும், ஆதரவற்ற குழந்தைகள், தெருவோரத்தில் இருப்பவர்களுக்கு தன்னால் இயன்ற உதவியை உதவி செய்துவிட்டு மகிழ்ச்சியடைவேன் என்றும் கூறி அனைவரையும் ஆச்சர்யப்படுத்தினார்.
ரமணியம்மாள் சாதனை பற்றி உங்கள் கருத்து என்ன? உங்கள் பதிலை கமெண்ட் பாக்ஸ்ல் தெரிவியுங்கள். மற்றும் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.


இது போன்ற செய்திகளை உடனுக்குடன் பெற SUBSCRIBE செய்து எங்களுடன் இணைந்திடுங்கள்.
Previous Post Next Post