ராஜமௌலி
பிரம்மாண்ட படங்களுக்கு பெயர் போனவர் ராஜமௌலி. ‘மாவீரன், நான்
ஈ, பாகுபலி’ படங்களே இதற்கு சாட்சி. சென்ற வருடம் ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்த 'பாகுபலி
– 2' மற்றும் பாகுபலி முதல் பாகம் என அதில் இடம்பெற்ற பிரம்மாண்ட
காட்சிகள் எல்லோராலும் மறக்க முடியாத ஒன்று. பாகுபலி வசூலிலும் சக்கை போடு போட்டது
குறிப்பிடத்தக்கது.
பாகுபலி
பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களுக்குமான பட்ஜெட் 300 கோடி என்று பேச்சு இப்போதுவரை உலா வருகிறது. ஆனால்,
அந்த படத்திற்கான செலவு எவ்வளவு என்பது இதுவரை சரியாக தெரியவில்லை. இப்போது
பாகுபலியை தூக்கி சாப்பிடும் அளவுக்கு புது படம் ஒன்றை இயக்க இருக்கிறார் ராஜமௌலி.
ராஜமௌலியின் இந்த படத்தில் ஜுனியர் என்டிஆர், ராம்சரண் ஆகியோர்
நடிக்க உள்ளனர்.
பட்ஜெட்
இந்த படத்திற்கான கதை சம்மந்தமான வேலைகள் அனைத்தும் நிறைவடைந்துவிட்டதாம்.
இந்த படத்திற்கான பட்ஜெட் மட்டும் 300 கோடி ரூபாயாக நிர்ணயித்துள்ளார்களாம். பாகுபலியை விட
அதிக பட்ஜெட்ல் இந்த படம் உருவாக உள்ளது. சரித்திரப் பின்புலம் கொண்ட படத்தை
எடுக்கவும், சயின்ஸ் பிக்ஷ்ன் படத்தை எடுக்கவும் மட்டும்தான் அதிக
செலவாகும். அப்படியெனில் ராஜமௌலியின் அடுத்த படம் என்ன மாதிரியான கதை கொண்ட படம்,
அதற்கு ஏன் 300 கோடி ரூபாய் பட்ஜெட் என்று
பலரும் பேசிக் கொள்கிறார்களாம்.
2.0
ராஜமௌலியை விட அதிக பட்ஜெட்ல் படம் இயக்குபவர் யார் தெரியுமா?
சட்சாத் நம்ம ‘ஷங்கர்’ தான். தற்போது இவர் இயக்கி வரும் ரஜினிகாந்த் நடிக்கும் '2.0' படம்தான் இந்தியாவில் அதிக பட்ஜெட் படமாக படமாக உருவாகி இருக்கிறது. 2.0
படத்தின் பட்ஜெட் சுமார் 400 கோடி ரூபாயாம்.
உங்களுக்கு ராஜமௌலி இயக்கிய
படங்களில் பிடித்தது எது ? உங்கள் பதிலை கமெண்ட் பாக்ஸ்ல் தெரிவியுங்கள். மற்றும்
உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.