லட்சுமி
‘தி வீக்’ பத்திரிக்கை பெண்
பத்திரிகையாளர் ‘லட்சுமி’ ‘நிர்மலா தேவி’ விவகாரம் தொடர்பாக ஆளுநரின் நிருபர்கள்
சந்திப்பு நிகழ்ச்சியில் ஒரு கேள்வியை கேட்டார். அதற்கு அவர் அந்த பெண் நிருபர்
லட்சுமியின் கன்னத்தில் ஆளுநர் தட்டினார். இது அவருக்கு எரிச்சலையூட்டியதை
தொடர்ந்து அவர் தனது கோபத்தை டுவிட்டர் மூலம் வெளிபடுத்தினார். இதனால் ஆளுநர் அவரிடம்
மன்னிப்பு கேட்டார்.
எஸ்.வி.சேகர்
இந்த சம்பவத்தை தொடர்ந்து நடிகரும்,
முன்னாள் எம்.எல்.ஏவுமான எஸ்.வி.சேகர் தனது டுவிட்டர் பக்கத்தில் மிக அசிங்கமான
வார்த்தைகளால் பத்திரிகையாளர்கள் குறித்த ஒரு பதிவை போட்டிருந்தார். இதற்கு கடும்
கண்டனம் எழுந்த உடன் உடனடியாக நீக்கி விட்டார். பத்திரிக்கையளர்களிடமும் மன்னிப்பு
கேட்டார், ஆனால் ஊடகங்களிலும், சமூக
வலைத்தளங்களிலும் எஸ்.வி சேகருக்கு எதிராக கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது.
மன்னிப்பு கடிதம்
மேலும் இது தொடர்பாக எஸ்.வி.சேகர் அளித்துள்ள
விளக்கத்தில், எனது நண்பர் எனக்கு அனுப்பிய பேஸ்புக் பதிவை படிக்காமல் அதை அப்படியே
பார்வார்டு செய்துவிட்டேன். என்னை மன்னித்து விடுங்கள் என்று கூறியுள்ளார். இவர்
பதிவுக்கு கடும் எதிர்ப்பு நிலவியதை அடுத்து தான் பார்வேடு செய்த கருத்தால்
மனவருத்தம் ஏற்பட்டுள்ள அனைத்து பத்திரிகை பெண் நிருபர்களிடமும் மன்னிப்பு கேட்டு
கொள்கிறேன் என்று கூறி ஒரு கடிதத்தை எஸ் வி சேகர் அனுப்பியுள்ளார்.
கைது செய்
பெண் பத்திரிகையாளர்கள் பதிவிட்ட
நடிகர் எஸ்.வி.சேகர் மீது பெண்கள் வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும் என்று
தமிழ்நாடு யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் மாநில தலைவர் பிஎஸ்டி புருஷோத்தமன் தமிழக அரசை
கேட்டு கொண்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள அறிக்கையில் கூறியுள்ளதாவது, பெண்
நிருபர்கள் குறித்த எஸ்.வி. சேகரின் கருத்து மிகவும் கண்டிக்கத்தக்கது. இது பணிக்கு
செல்லும் அத்தனை பெண்களையும் இழிவுபடுத்துவது போல் உள்ளது. இந்த செயலை தமிழ்நாடு
யூனியன் ஆப் ஜர்னலிஸ்ட்ஸ் வன்மையாக கண்டிக்கிறது என்றார்.
எஸ்.வி.சேகர் பதில் ஏற்கத்தக்கதா? இது குறித்த உங்கள் கருத்துகளை கமெண்ட் பாக்ஸ்ல் பதிவிடுங்கள். மேலும்
உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்யுங்கள்.