ஐபிஎல்
2018-ம் ஆண்டின் ஐபிஎல் போட்டிகள் மும்பையில் நேற்று இரவு பிரமாண்டமான
வாணவேடிக்கையுடன் ஆரம்பமாகியது. நேற்றைய துவக்க விழாவின் சிறப்பு நிகழ்ச்சியில் இந்தி
நடிகர்கள் ஹிருத்திக் ரோஷன், வருண் தவான், நடிகைகள் ஜாக்குலின் பெர்னாண்டஸ், ஆகியோர் நடனமாடினர்.
தமன்னா
தமிழ், தெலுங்கில் முன்னணி ஹீரோயினாக உள்ள
தமன்னாவும் இந்த விழாவில் நடனமாடினார். வெறும் 10 நிமிடம் மட்டும் அவர் நடனமாடினார். இந்த போட்டியில் நடனமாடியதற்காக
அவருக்கு 50 லட்ச ரூபாய் ஐபிஎல் நிர்வாகத்தால் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம்.
இது மற்ற நடிகர், நடிகைகள் மத்தியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தோனி ரசிகை
தோனி ரசிகை
இது பற்றி தமன்னா கூறுகையில், "ஐபிஎல் துவக்க விழாவில் நான் நடனமாடியது மிகவும் மககிழ்ச்சியாக
உள்ளது. இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் ஆகிய மொழிப் பாடல்களுக்கு நான் நடனமாடி உள்ளேன். நான்
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தீவிர ரசிகை. இரண்டு வருடங்கள் கழித்து சென்னை
சூப்பர் கிங்ஸ் அணி போட்டியில் பங்கேற்கிறது. மேலும் நான் மகேந்திர சிங் தோனியின்
மிகப்பெரிய ரசிகை. சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆட்டத்தை பார்க்க அவளாக உள்ளேன்
எனவும் கூறினார்.
பிராவோ
நேற்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்க்ஸ் மற்றும்
மும்பை அணிகள் மோதுகின்றன. இந்த போட்டியின் கடைசி கட்டத்தில் ட்வய்னே பிராவோவின்
அதிரடியான பேட்டிங்கில் நிலை குலைந்து போன மும்பை இந்தியன்ஸ் அணி பரிதாபமாக
தோற்றது குறிப்பிடத்தக்கது. இதனால் தமன்னா மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார்.