-->

விஜயகாந்த் சினிமாவில் மட்டுமல்ல நிஜத்திலும் ரியல் ஹீரோ தான்

நடிகர் விஜயகாந்த்

விஜயகாந்த்
புரட்சிகலைஞர் விஜயகாந்த் திரைத்துறைக்கு வந்து 40 ஆண்டுகள் ஆகிறது. அதை கொண்டாடும் வகையில் நேற்று காஞ்சிபுரம் மாவட்டம் கரசங்காலில் விழா நடைபெற்றது. மேலும் கலைத்துறை மற்றும் அரசியலில் விஜயகாந்த் கடந்து வந்த பாதையை பற்றிய சிறப்பு குறும்படம் திரையிடப்பட்டது.

இந்த விழாவில் நாசர், சரத்குமார், சத்யராஜ், தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இயக்குநர்கள் எஸ்.பி.முத்துராமன், எஸ்.ஏ.சந்திரசேகர், விக்ரமன், செல்வமணி மற்றும் பல்வேறு நடிகர், நடிகைகளும், அரசியல் பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

நன்கொடை
இதை தொடர்ந்து நடிகர் சத்யராஜ் விஜயகாந்தை பற்றி பேசும்போது தமிழ்நாட்டுல மட்டும் இல்லை, இந்தியாவுல எந்த மூலையில யாருக்கு ஒரு கஷ்டம் வந்தாலும் முதல் நன்கொடை தருகிறவர் கேப்டனாக தான் இருக்கும்.

புரட்சி கலைஞர் விஜயகாந்த்

ரியல் ஹீரோ
ஈழத்துல போர் உச்சத்தில் இருந்தபோது இயக்குனர் மணிவண்ணன் எழுதிய நாடகத்தில் நடித்து பெரிய தொகையை வசூலிச்சு கொடுத்தார் விஜயகாந்த். அதோடு நில்லாமல், தன் மகனுக்கு பிரபாகரன் என்றும் பெயரும் வைத்தார். அவர் சினிமாவில் மட்டும் அல்ல நிஜத்திலும் ரியல் ஹீரோ தான்.

தைரியம்
ஒருமுறை ஆச்சி மனோரமா வீட்டுலிருந்து வரும்போது யாரோ ஒருவன் ஒரு பொண்னின் செயினை பறிச்சிட்டு ஓடுனான். அப்போது கொஞ்சமும் தாமதிக்காமல் தன்னோட வண்டியில் இருந்து இறங்கி விரட்டிப் பிடிச்சாரு பாருங்க, அந்த தைரியம் எத்தனை பேருக்கு வரும். இப்படி ஒரு நண்பர் எனக்கு கிடைச்சதுல நான் ரொம்ப சந்தோஷப்படுறேன்" என்றார்.

மீண்டும் நடிப்பார்
விழாவில் பேசிய இயக்குனர் செல்வமணி விஜயகாந்தை வைத்து மீண்டும் படம் எடுக்க ஆசைப்பட்டு அதை மேடையில் தெரிவித்தார். அதற்கு பதிலளித்த பிரேமலதா விஜயகாந்த்,செல்வமணி, சார் சொன்னதுபோல், கேப்டன் மீண்டும் நடிப்பார். அவருக்கும் அதுதான் ஆசை என்றார்.

நன்றி
விஜயகாந்த் பேசும் போது, "எனக்குப் சொல்ல வேண்டியதை என் மனைவி சொல்லிட்டாங்க. கலைத்துறைக்கு உறுதுணையாக நான் எப்போதும் நிற்பேன். எனக்காக இங்கு வந்த எல்லோருக்கும் என் மனமார்ந்த நன்றி" என்று சுருக்கமாக தன் உரையை முடித்துக்கொண்டார்.
விஜயகாந்த் மகன் சண்முகபாண்டியன்

சண்முகபாண்டியன்
லண்டனில் சூட்டிங்ல் உள்ள அவர் மகன் சண்முகபாண்டியன் ஒரு விடியோவை அனுப்பி இருந்தார். அதில் தன் அப்பாவைப் பற்றி பேசியவர், ஒரு சர்ப்ரைஸ் வெச்சிருக்கேன் என்று சொல்லி விஜயகாந்த் கண்களை தன் கையில் டாட்டூவாக போட்டு அதைக் காட்டினார்.
Previous Post Next Post