தேவையான பொருட்கள்:
1.
சிக்கன் - அரை கிலோ
2.
முட்டை - 4
3.
சாம்பார் வெங்காயம் - 100 கிராம்
4.
இஞ்சி - சிறு துண்டு
5.
பூண்டு - 6 பல்
6.
காய்ந்த மிளகாய் - 4
7.
தனியா - 1 டேபிள் ஸ்பூன்
8.
மிளகு - 2 ஸ்பூன்
9.
கடுகு, கறிவேப்பிலை
- தாளிக்க தேவையான அளவு
10.
உப்பு, எண்ணெய்
- தேவையான அளவு
செய்முறை :
1. சிக்கனைச்
நன்கு சுத்தம் செய்துக் கொள்ளவும்.வேக வைத்த முட்டையை இரண்டு பாதியாக வெட்டி எடுத்துக்கொள்ளவும்.
2. தனியா, மிளகாய், இஞ்சி, பூண்டு, மிளகு, வெங்காயம் ஆகியவற்றை வறுத்து அரைத்துக் கொள்ள வேண்டும்.
3. ஒரு
கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு மற்றும் கறிவேப்பிலையை சேர்த்து தாளித்து அரைத்த மசாலாவையும் அதனுடன் சேர்க்கவும்.
4. பின் அதனுடன் சிக்கனைச் சேர்த்து சிறிது நீர் ஊற்றி வேக விட
வேண்டும். தேவையான அளவு உப்பு சேர்த்துக் கொள்ளவும்.
5. சிக்கனும்
மசாலாவும் சேர்ந்து கெட்டியானதும், வெட்டி
வைத்த முட்டையையும் சேர்த்துக் கிளற வேண்டும்.
6. மிதமான
தீயில் இந்த சாப்ஸை வைத்து சில நிமிடங்கள் கழித்துக் கிளறி இறக்கினால் சுவையான சிக்கன்
எக் பெப்பர் சாப்ஸ் ரெடி.