-->

சில்லி சிக்கன் - Chilly Chicken


காரசாரமான சில்லி சிக்கன்


தேவையானவை :

  1. கோழிக்கறி - 1/2 கிலோ
  2. பூண்டு - 5
  3. பச்சைமிளகாய் - சிறிதளவு
  4. உப்பு - சிறிதளவு
  5. வினிகர் - 1 டேபிள் ஸ்பூன்
  6. எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன

செய்முறை :

1.முதலில் சுத்தம் செய்த கோழிக்கறியை சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.

2.ப‌ச்சை ‌மிளகா‌ய், பூ‌ண்டை விழுதாக அரை‌த்து வை‌த்து‌க் கொ‌ள்ளவு‌ம்.

3.ஒரு பாத்திரத்தில் கோழிக்கறி, வினிகர், உப்பு, பூண்டு, பச்சை மிளகாய் ‌விழுது சே‌ர்‌த்து நன்கு கல‌ந்து அரை மணிநேரம் ஊற வை‌க்கவு‌ம்.

4.வாண‌லி‌யி‌ல் எ‌ண்ணெ‌ய் ஊ‌ற்‌றி கா‌ய்‌ந்தது‌ம் கோ‌ழி‌க்க‌றி து‌ண்டுகளை போ‌ட்டு வத‌க்‌கி மிதமான ‌தீ‌யி‌ல் வேக விடவும்.

5.சிறிது நேரம் வாணலியை மூடி வைக்கவும். கோழிக்கறி வெந்ததும் திறந்து ந‌ன்கு ‌கிள‌றி‌விடவு‌ம்.

6.எல்லாம் ஒன்றாக கலந்து நன்றாக வெந்து வரும்போது இறக்கி வைக்க வேண்டும்.


Previous Post Next Post