தேவையானவை :
- சிக்கன் எலும்புடன் - 3 /4 கிலோ
- வெங்காயம் - 2 (நீளமாக நறுக்கியது)
- எண்ணெய் - 1 /4 கப்
- நெய் - 2 ஸ்பூன்
- மல்லித்தழை - சிறிதளவு
- புதினா - 1 /4 கப்
- குங்குமப்பூ - 1 டீஸ் ஸ்பூன்
- பால் - 1 /2 கப் (வெது வெதுப்பானது)
- பாஸ்மதி அரிசி - 3 கப்
- பிரியாணி இலை - 1
- கிராம்பு - 2
- மராட்டி மொக்கு - 1
- அனாசிப்பூ - 1
- கருஞ்சீரகம் - 2 டீஸ் ஸ்பூன்
- பச்சை மிளகாய் - 5 (பொடியாக நறுக்கியது)
- இஞ்சி, பூண்டு விழுது - 2 டேபிள் ஸ்பூன்
- தயிர் - 1 /2 கப்
- கருஞ்சீரகம் - 2 டீஸ் ஸ்பூன்
- மிளகாய்த்தூள் - 2 டீஸ் ஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1 /4 டீஸ் ஸ்பூன்
- மல்லித்தூள் - 1 டேபிள் ஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
- எலுமிச்சம்பழச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
- மல்லித்தழை - 1 /4 கப் (பொடியாக நறுக்கியது)
- பட்டை - ஒரு இன்ச்
- புதினா - 1 /2 கப் (பொடித்தது)
- மிளகு - 7 - 8
- ஏலக்காய் - 3
- கிராம்பு - 3
1. முதலில் அரிசியைக் களைந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்கவும்.
2. கோழி கறியை கழுவி வைத்துக் கொள்ளவும்.அரைக்க கொடுத்துள்ள பொருட்களில் புதினா, மல்லித்தழை மீதமுள்ள பொருட்களை வறுத்து அரைத்துக் கொள்ளவும்.
3. இறுதியாக புதினா, மல்லித்தழை
சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்துக் கொள்ளவும்.அரைத்த விழுதை சிக்கனுடன் சேர்த்து, சிக்கன் ஊற வைக்க கொடுத்துள்ள பொருட்களையும்
சேர்த்து கலக்கி ஊற வைக்கவும். இதன் மேல் சிறிது வறுத்து வைத்துள்ள வெங்காயம்
சிறிது சேர்க்கவும்.
4. அனைத்தையும் ஒன்றாகக் கலந்து நான்கு மணி நேரம் வரை ஊற வைக்கவும்.ஒரு கனமான பாத்திரத்தில் தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
5. தண்ணீர் கொதிக்க ஆரம்பித்ததும் இதனுடன் நெய், எண்ணெய், கருஞ்சீரகம்,பிரியாணி
இலை,மராட்டி
மொக்கு அனாசிப்பூ, பட்டை,கிராம்பு சேர்க்கவும்.
6. தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து அதிக சூட்டில் 4 நிமிடங்கள் வரை வேக வைக்கவும் உடனடியாக சாதத்தை வடித்து தனியே வைக்கவும்.
6. தண்ணீர் நன்கு கொதிக்க ஆரம்பித்ததும் ஊற வைத்துள்ள அரிசியை சேர்த்து அதிக சூட்டில் 4 நிமிடங்கள் வரை வேக வைக்கவும் உடனடியாக சாதத்தை வடித்து தனியே வைக்கவும்.
7. குங்குமப்பூவை வெதுவெதுப்பான பாலுடன் கலந்து
வைத்திருக்கவும்.
8. ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடு செய்து, அதில் நெய், எண்ணெய் சேர்த்து, ஊற வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் அதிக சூட்டில் வைக்கவும்.
8. ஒரு அடி கனமான பாத்திரத்தை சூடு செய்து, அதில் நெய், எண்ணெய் சேர்த்து, ஊற வைத்துள்ள சிக்கனையும் சேர்த்து இரண்டு நிமிடங்கள் அதிக சூட்டில் வைக்கவும்.
9. இதன் மேலே வேக வைத்துள்ள சாதத்தை கொட்டி பரப்பி
விடவும். இதன் மேலே வறுத்து வைத்துள்ள வெங்காயம், மீதமுள்ள மல்லி, புதினா
இலை சேர்க்கவும்.இறுதியாக குங்கம்பூ கலவையை ஊற்றவும்.
10. பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு கண்ணாடி மூடி போட்டு கொள்ளவும்.
10. பாத்திரத்திலிருந்து நீராவி வெளியில் செல்லாதவாறு கண்ணாடி மூடி போட்டு கொள்ளவும்.
11. அதிக சூட்டில் 3 நிமிடங்கள் வரை வைக்கவும்.
பின் அடுப்பை மிதமான சூட்டிற்கு மாற்றி பிரியாணி வைத்துள்ள பாத்திரத்தை எடுத்து விடவும்.இப்போது நான் - ஸ்டிக் பாத்திரத்தை
அடுப்பில் வைத்து சூடு செய்யவும்.
12. நன்-ஸ்டிக் பாத்திரம் சூடானதும், இதன் மேலே பிரியாணி வைத்துள்ள பாத்திரத்தை வைத்து அரை மணிநேரம் வரை வேக விடவும்.ஹைதராபாத் சிக்கன் தம் பிரியாணி ரெடி.