தேவையான
பொருட்கள்:
- சிக்கன் - 1 கிலோ (லெக் பீஸ் அல்லது மார்பக பீஸ்)
- இஞ்சி விழுது -1 டேபிள் ஸ்பூன்
- பூண்டு விழுது -1 டேபிள் ஸ்பூன்
- சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
- சில்லி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
- தக்காளி சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
- மிளகு தூள் - 1 டீஸ்பூன்
- உப்பு - 1 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் - 1 கப்
மாவிற்கு:
- மைதா - 1 1/2 கப்
- முட்டை - 1 (நன்கு அடித்துக் கொள்ளவும்)
- மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
- தண்ணீர் - 2 கப்
- மிளகு தூள் - 1/2 டீஸ்பூன்
- உப்பு - தேவையான அளவு
கோட்டிங்கிற்கு:
- பிரட் தூள் - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
1. முதலில் சிக்கன்
துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவிக் எடுத்துக் கொள்ளவும்.
2. பின்னர் ஒரு பாத்திரத்தில் சிக்கனை போட்டு, அதில்
தக்காளி சாஸ், சோயா சாஸ், சில்லி சாஸ்,
இஞ்சி மற்றும் பூண்டு விழுது, மிளகு தூள்,
உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து 10 நிமிடம்
நன்கு வேக வைக்கவும்.
3. சிக்கன் முக்கால்வாசி வெந்தவுடன், அதை இறக்கி
தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
4. பின் மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, மிளகு தூள், மஞ்சள் தூள், அடித்து
வைத்திருக்கும் முட்டை மற்றும் நீர் ஊற்றி நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
5. பிறகு ஒரு தட்டில் பிரட் தூளை போட்டு வைத்துக் கொள்ள வேண்டும்.
6. பின் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சிக்கன்
துண்டை எடுத்து, மாவில் நனைத்து, பிரட்
தூளில் பிரட்டி எண்ணெயில் போட்டு எடுத்தால் சுவையான கேஎஃப்சி சிக்கன் ரெடி.