தேவையான பொருட்கள்:
- நண்டு - ஒரு கிலோ
- பெரிய வெங்காயம் - 2
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் - 2
- பூண்டு - 50 கிராம்
- இஞ்சி - 50 கிராம்
- சின்ன ஜீரகம் தூள் - ஒரு டீஸ்பூன்
- கரம் மசாலா தூள் - ஒரு டீஸ்பூன்
- மஞ்சள் பொடி - ஒரு டீஸ்பூன்
- பெரிய ஜீரகம் தூள் - ஒரு டீஸ்பூன்
- எலும்மிச்சை பழ சாறு - ஒரு டீஸ்பூன்
- சமையல் எண்ணெய் - 50 மில்
- மிளகாய் தூள் - ஒரு டீஸ்பூன்
- மல்லி தூள் - ஒரு டீஸ்பூன்
- மிளகு தூள் - ஒரு டீஸ்பூன்
- மல்லி தழை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- கருவேப்பிலை - தேவையான அளவு
செய்முறை:
1. நண்டை நன்றாக தண்ணீரில் கழுவி தனியாக வைக்கவும். பிறகு வெங்காயம், தக்காளி பச்சை மிளகாய்,சிறிய துண்டுகளாக நறுக்கி வைத்துகொள்ளவும்.
2. பிறகு இஞ்சி பூண்டுடன் சின்ன ஜீரகம் சேர்த்து தண்ணீர் விடாமல் நன்றாக அரைத்து வைத்துகொள்ளவும்..
3. ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றவும்,எண்ணெய் நன்றாக காய்ந்தவுடன் முதலில் கொஞ்சம் கருவேப்பிலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் இவைகளை போட்டு கிளறி விட்டு மிதமான தீயில் வைக்கவும்
.
4. தயாராக வைத்துள்ள இஞ்சி பூண்டு விழுதை சேர்த்து மீண்டும் நன்றாக கிளறவும்.
5. பிறகு மிளகாய் தூள், மல்லி தூள், கரம் மசாலா தூள், மிளகுதூள், மற்றும் பெரிய ஜீரகம் தூள் இவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பு சேர்த்து நன்றாக கிளறி மிகவும் குறைவான தீயில் சுமார் 2 நிமிடம் மூடி வைக்கவும்.
6. அதனுடன் சுத்தம் செய்து வைத்திருக்கும் நண்டை சேர்த்து நன்றாக கிளறி மிதமான தீயில் சுமார் 10 நிமிடம் மூடி வைக்கவும். அடி பிடிக்காமல் பார்த்துக்கொள்ளவும்.
7. பாதி அளவு மூடியிட்டு மிக மிக குறைவான தீயில் சுமார் 2 நிமிடம் கிளறி விடவும்.பிறகு எலுமிச்சை பழ சாறு ஊற்றி மீண்டும் கிளறி கொத்தமல்லி தூவி இறக்கினால் வையான நண்டு ரோஸ்ட் ரெடி.