அஜித்குமார்
நடிகர் அஜித்குமாரின்
சொந்த ஊர் கேரளா. 1971ம் ஆண்டு மே மாதம் 1ம் தேதி பிறந்தார். உழைப்பாளர்
தினத்தில் பிறந்து கடின உழைப்பால் வளர்ந்து ஓர் உன்னத மனிதராகவும் உயர்ந்து நிற்கும்
அஜித்தின் வாழ்க்கை பயணத்தின் சிறு பகுதியை அவரது பிறந்தநாளில் அவரது ரசிகர்களுக்காக
இங்கே வழங்கியுள்ளேன்.
அறிமுகம்
1992ம் ஆண்டு பிரேம்
புஸ்தகம் என்ற தெலுங்கு படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானார். தமிழில்
அமராவதி படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் பாசமலர்கள், பவித்ரா உள்ளிட்ட படங்களில் நடித்தார். அஜித்தின் முதல்
வெற்றிப்படம் ஆசை. அதனைத் தொடர்ந்து காதல் மன்னன், வாலி, பூவெல்லாம் உன் வாசம்,
முகவரி, வில்லன், கண்டுகொண்டேன் கண்டு கொண்டேன், வரலறு, பில்லா உள்ளிட்ட பல்வேறு வெற்றிப்படங்களில் நடித்துள்ளார்.
பின்னர்
திரில்லர் படங்களில் தனது இன்னிங்ஸை துவக்கிய அவர் வாலி, தீனா, அமர்க்களம் ஆகிய படங்களில் நடித்து சாதனை படைத்தார். வரலாறு
மற்றும் வில்லன் ஆகிய படங்களில் நடிப்பில் தனி முத்திரை பதித்தார்.
குடும்பம்
அமர்களம்
திரைப்படத்தில் நடிக்கும்போது நடிகை ஷாலினியை இரு வீட்டார் சம்மதத்துடன் காதல்
திருமணம் செய்து கொண்டார். தற்போது இவர்களுக்கு அனோஸ்கா என்ற ஒரு மகளும் ஆத்விக்
என்றொரு மகனும் இருக்கிறார்கள். அஜித்தின் ரசிகர்கள் அவரை "அல்டிமேட்
ஸ்டார்" என்றும் "தல" என்றும் பட்டப்பெயர்களுடன் அழைக்கிறார்கள்.
ரேஸ் பிரியர்
அஜித் சிறந்த கார்
பந்தய வீரர் என்பது கூடுதல் தகவல். 2003 ஆம் ஆண்டு
ஃபார்முலா ஆசியா BMW சாம்பியன்ஷிப் போட்டியில் போட்டியிட்டார்.
ஃபார்முலா சாம்பியன் போட்டியில் வென்ற ஒரே இந்திய நடிகர் என்ற பெருமையைப்
பெற்றார். பின்னர் 2010 ஆம் ஆண்டு ஃபார்முலா 2 சாம்பியன்ஷிப் பந்தயங்களிலும்
கலந்து கொண்டார்.
விருதுகள்
தமிழக அரசின் சிறந்த
நடிகருக்கான சிறப்பு திரைப்பட விருது, எம்.ஜி.ஆர். திரைப்பட விருது, பிலிம்பேர் விருது போன்ற பல்வேறு விருதுகளையும்
பெற்றுள்ளார். எந்த வேடத்தையும் சவாலாக ஏற்று புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். போல்
சிறப்பாக நடிப்பதில் வல்லவர்.
நல்வழி
தனது ரசிகர்கள் ரசிகர்
மன்றங்களை தொடங்கக்கூடாது என்றும் முதலில் அவர்கள் தங்கள் தாய் தந்தையரை
பார்க்கவேண்டும் என்று அவர்களை நல்வழிப்படுத்தியவர். தன்னிடம் வேலை செய்பவர்கள்
கூட நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணத்தில் சென்னை அருகே உள்ள கேளம்பாக்கத்தில்
அவர்களுக்கு நிலமும் வாங்கிக்கொடுத்து அதில் வீடும் கட்டி கொடுத்த பரந்த மனம்
கொண்டவர்.
யார் உதவி என்று கேட்டாலும் அதை பற்றி விளம்பரப்படுத்தி கொள்ளாமல்
அவர்களுக்கு தன்னாலான உதவிகளை செய்து வருபவர். எந்த சமயத்திலும் யாரையும்
காயப்படுத்தக்கூடாது என்ற மன உறுதி கொண்டவர்.
ரசிகர்கள் கொண்டாட்டம்
நடிகர்
அஜித்தின் 47வது பிறந்தநாள் இன்று, இதனை அஜித் ரசிகர்கள் விமரிசையாக கொண்டாடி வருகிறார்கள். வழக்கம் போல
இந்த பிறந்தநாளிலும் அஜித்தை காணவில்லை. தனது குடும்பத்துடன் எளிமையாக தனது
பிறந்தநாளை கொண்டாட திட்டமிட்டுள்ளார் தல.
ஆனால், அஜித் ரசிகர்கள் சும்மா இருப்பார்களா.? நள்ளிரவு 12 மணிக்கு அஜித் இல்லத்தின் முன்பு ஒன்றிணைந்த
நூற்றுக்கும் மேற்ப்பட்ட அஜித் ரசிகர்கள் கொடி, பேனர், கேக் என தல தல தல என்ற கோஷத்துடன்
அஜித்திற்கு பிறந்தநாள் வாழ்த்து கூறி மகிழ்ந்தனர்.