-->

ஆம்பூர் ஸ்பெஷல் மட்டன் பிரியாணி - Ambur Special Mutton Biriyani



மணமணக்கும் ஆம்பூர் மட்டன் பிரியாணி

தேவையான பொருட்கள்:
  1. பாசுமதி அரிசி - 1 கிலோ
  2. மட்டன் - 1 கிலோ
  3. மிளகாய் தூள் - 2 தேக்கரண்டி
  4. வெங்காயம் - 500 கிராம்
  5. தக்காளி - 500 கிராம்
  6. பச்சை மிளகாய் - 5
  7. புதினா - 1 கப்
  8. எண்ணெய் – தேவையான அளவு
  9. நெய் - 50 மில்லி
  10. எலுமிச்சை - ½  பழம்
  11. பட்டை, ஏலம், கிராம்பு - தலா 2
  12. பிரியாணி இலை - 2
  13. உப்பு தூள் - தேவையான அளவு


செய்முறை:

1. முதலில் அரிசியை ஊற வைத்துக் கொள்ள வேண்டும். மட்டனை நன்கு கழுவி சுத்தம் செய்து நீரை வடித்து வைக்க வேண்டும்.

2. ஒரு அகன்ற பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி அதில் பட்டை, ஏலம், கிராம்பு, பிரியாணி இலை போட்டு,அதனுடன் வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

3. பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு வதக்கி மிளகாய் தூள், பழுத்த பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.பிறகு மைதா, தயிர் சேர்த்து.அதனுடன் தக்காளியும் கொத்துமல்லியும் சேர்க்க வேண்டும்.

4. அடுத்து மட்டனுடன் உப்பு சேர்த்து நன்கு கிளறி, மிதமான தீயில் வைத்து மட்டனை வேக விட வேண்டும். மட்டன் வெந்து கிரேவி பதம் வரும் வரை வேக விட வேண்டும்.

5. பின் ஊற வைத்துள்ள பாசுமதி அரிசியை சேர்த்து, ஒரு டம்ளர் அரிசிக்கு 1 1/4 வீதம் தண்ணீர் அளந்து ஊற்ற வேண்டும்.பின்னர் லேசாக மேலிருந்து கீழாக சாதம் குழையாமல் கிளறி விட வேண்டும்.

பின் கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான ஆம்பூர் மட்டன் பிரியாணி ரெடி.

Previous Post Next Post