முதல் ப்ளே ஆப்
ஐ.பி.எல்., தொடரின் முதல் தகுதிச் சுற்றில் இன்று சென்னை சூப்பர்
கிங்க்ஸ், சன்
ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதுகின்றன. லீக் ஆட்டங்களில்
மோதிய 2 போட்டிகளிலும் சென்னை அணி ஐதராபாத்தை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதே போல மீண்டும் வென்று பைனலுக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த இரு அணிகளும் இதுவரை மோதியுள்ள 9 ஐ.பி.எல்., போட்டிகளில் சென்னை அணி 7ல் வென்று ஆதிக்கம் செலுத்துகிறது. ஐதராபாத் அணி 2ல் மட்டும் தான் வென்றுள்ளது.
லீக் சுற்றில் இரு அணிகள் மோதிய 2
போட்டியிலும் சென்னை அணி வென்றது. இது சென்னை அணிக்கு சாதகமாக
இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தவிர இன்று வெல்லும் அணி நேரடியாக பைனலுக்கு
செல்லும் என்பதால் அனல் பறக்கும் மோதல் காத்திருக்கிறது.
ப்ளே ஆப்
லீக் ஆட்டங்களின் முடிவில் ‘நடப்பு சாம்பியன்’ மும்பை, பெங்களூரு, பஞ்சாப், டில்லி என 4 அணிகள் கோப்பை
வாய்ப்பை இழந்து வெளியேறின. ஐதராபாத், சென்னை, கோல்கட்டா, ராஜஸ்தான் அணிகள் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு தகுதி பெற்றன.
இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடக்கும் முதல் தகுதிச்சுற்றில்
ஐதராபாத், மற்றும் சென்னை அணிகள் மோதுகின்றன. 2 ஆண்டு தடைக்குப் பிறகு களிறங்கினாலும் சென்னை அணி அதே
உத்வேகத்துடன் 9 வது முறையாக ப்ளே ஆப்க்கு தகுதி பெற்று சாதித்தது.
வலுவான பேட்டிங்
பேட்டிங்கில் ‘அனுபவ’ வாட்சன் (438) இன்று
மீண்டும் அம்பதி ராயுடுவுடன் (586 ரன்) களமிறங்குகிறார். கடந்த போட்டியில் ஏற்பட்ட சரிவை மறந்து, ராயுடு இன்று நல்ல துவக்கம் தருவார் என நம்பலாம். இதுவரை
பெரிய அளவில் சோபிக்காத ரெய்னா (391) தொடரின் இறுதிக்கட்டத்தில் ‘பார்மிற்கு’ திரும்பியது ரசிகர்களுக்கு உற்சாகம் தான்.
மிரட்டலான ஹைதராபாத்
ஐதராபாத் அணி 9 வெற்றிகள் (14 போட்டி)
பெற்று முதல் அணியாக தகுதி பெற்றாலும்,
லீக் சுற்றில் கடைசியாக களமிறங்கிய 3 போட்டிகளில் தொடர் தோல்வியடைந்துள்ளது. இதில் இருந்து மீண்டு
வர இந்த போட்டியில் ஜெயிக்க ஹைதராபாத் களமிறங்கும். மிரட்டல் ‘பார்மில்’ உள்ள கேப்டன் வில்லியம்சன் 661
ரன்கள் இன்று நான்றாக ஆடும் பட்சத்தில் சென்னை அணிக்கு தொல்லைதான். இவருக்கு ஷிகர் தவான் (437) உதவுகிறார். அடுத்து வரும் மணிஷ் பாண்டே (276), யூசுப் பதான் (188) தங்கள் பங்கிற்கு
ரன்கள் சேர்க்கின்றனர்.
இத்தொடரின் சிறந்த பவுலிக்கை கொண்ட அணியாக ஐதராபாத் உள்ளது. 17 விக்கெட் வீழ்த்திய
சித்தார்த் கவுல், ‘சுழலில்’ 16 விக்கெட் சாய்த்த ரஷித் கான், சாகிப் அல் ஹசன் (13) கூட்டணியுடன் புவனேஷ்வர் குமாரும் (8) சென்னைக்கு தொல்லை தரலாம்.
இரண்டாவது வாய்ப்பு
இன்று நடக்கும் தகுதிச்சுற்று போட்டியில் எந்த அணி தோற்றாலும்
அவர்களுக்கு இரண்டாவது வாய்ப்பு உண்டு. ஏனெனில் நாளை நடக்கும் கொல்கத்தா,
ராஜஸ்தான் போட்டியில் வெல்லும் அணியுடன் இந்த போட்டியில் தோற்கும் அணி இரண்டாவது
முறையாக மோதும்.
நேர மாற்றம்
இனி நடக்க உள்ள தகுதி சுற்று போட்டிகள் மற்றும் இறுதி போட்டி வழக்கமாக
போட்டி தொடங்கும் 8 மணிக்கு பதிலாக 7 மணிக்கு தொடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.