CSK vs KXIP
ஐபிஎல் தொடரில் இன்று இரவு புனேவில் நடைபெற்ற
கடைசி லீக் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை
வீழ்த்தியது. இவ்விரு அணிகளுக்கு இடையயேயான முதல் போட்டியில் பஞ்சாப் அணி வென்றது.
இந்த தோல்விக்கு தோணி பழி தீர்த்துக்கொண்டார். மேலும் பஞ்சாப் அணியின் ப்ளே ஆப்
கனவையும் சிதைத்தார்.
கடும் நெருக்கடி
அஸ்வின் தலைமையிலான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி
தொடரின் முதல் 6 போட்டிகளில் 5ல் வெற்றிகளை குவித்து வலுவாக இருந்தது. ஆனால் பிற்பாதியில்
தொடர்ச்சியாக தோல்விகளை சந்தித்து கடும் நெருக்கடிக்கு உள்ளாகி உள்ளது. எனவே இந்த
ஆட்டத்தில் மிக பெரிய வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற நெருக்கடியில்
களமிறங்கியது.
பஞ்சாப்
டாஸ் வென்ற சென்னை கேப்டன் தோணி
பஞ்சாப் அணியை முதலில் பேட் செய்ய அழைத்தார். ஆனால் ஆரம்பமே பஞ்சாப் அணிக்கு இடியை
இறக்கியது சென்னை. அந்த அணியின் துவக்க வீரர்கள் கெயில் 0 ரன்னிலும், ராகுல் 7
ரன்னிலும் ஆட்டமிழந்தனர். மற்றொரு வீரரான பின்ச் 4 அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தனர்.
சிறிது நேரம் தாக்குபிடித்த மனோஜ்
திவாரி 35 ரன்னிலும், மில்லர் 24 ரன்னிலும்
அவுட்டாகினர். சென்னை வீரர்களுக்கு போக்கு காட்டிய கருண் நாயர் 54 ரன்னில் அவுட்டானார். 2௦ ஓவர் முடிவில் பஞ்சாப் அணி 153 ரன்களுக்கு
அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
சென்னை
பின்னர் 154 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற நிலையில்
சென்னை அணி விளையாட தொடங்கியது. தொடக்க வீரர்கள் ராயுடு 1 ரன்னிலும், டு பிளசிஸ் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவுட்டாகினர். பின்னர் களமிறங்கிய ரெய்னா
பொறுப்பாக விளையாடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.
சாம் பில்லிங்க்ஸ் ௦ ரன்னிலும்,
முன்னரே இறக்கி விடப்பட்ட பௌலர்கள் ஹர்பஜன் மற்றும் சஹர் தங்கள் பங்குக்கு முறையே
19 மற்றும் 39 ரன்கள் எடுத்தனர். தோணி 16 ரன்னிலும், ரெய்னா 61 ரன் ரன்னிலும் இறுதி
வரை அவுட்டாகாமல் சென்னையை வெற்றி பெற வைத்தனர்.
குவலிப்பயர்
இந்த வெற்றியின் மூலம் பஞ்சாப்
அணியின் ப்ளே ஆப் கனவு முற்றிலுமாக சிதைந்தது. சென்னை அணி 18 புள்ளிகளுடன் இரண்டாம் இடத்தை தக்க வைத்து
கொண்டது.
சென்னை அணி வரும் 22ம் தேதி சன்
ரைசெர்ஸ் ஹைதராபாத் அணியுடன் குவலிப்பயர் போட்டியில் மோத உள்ளது.