-->

செட்டிநாடு மீன் குழம்பு - Chettinadu Fish Kulambu

செட்டிநாடு மீன் குழம்பு செய்முறை


தேவையான பொருட்கள்:

  1. மீன் - 10 துண்டுகள்
  2. தக்காளி - 5 சிறியது
  3. சின்ன வெங்காயம் - 15-20 (பொடியாக நறுக்கியது)
  4. பூண்டு – 10
  5. கறிவேப்பிலை – சிறிதளவு
  6. மிளகாய் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
  7. சாம்பார் பொடி -1 டேபிள் ஸ்பூன்
  8. சீரகப் பொடி - 1 டீஸ்பூன்
  9. மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
  10. உப்பு - தேவையான அளவு
  11. கொத்தமல்லி – சிறிதளவு
  12. புளி - 1 எலுமிச்சைபழ அளவு
தாளிக்க:

  1. நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
  2. சோம்பு - சிறிதளவு
  3. சீரகம் - சிறிதளவு
  4. வெந்தயம் – சிறிதளவு
செய்முறை:

1. முதலில் மீன் துண்டுகளை நன்கு சுத்தமாக கழுவ வேண்டும்.
பின் அதில் மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து பிரட்டி, 5 நிமிடம் ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.

2. பின்னர் வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம், வெந்தயம், கரிவேப்பிலை சேர்த்து வதக்கி பின் பூண்டு சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.

3. பின் அதில் வெங்காயம், தக்காளி சேர்த்து 2 நிமிடம் நன்கு வதக்கி, பின் சீரகப் பொடி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.

4. அடுத்து, அதில் மிளகாய் தூள், சாம்பார் பொடி சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி,  புளிச்சாறு சேர்த்து 15 நிமிடம் கொதிக்கவிட வேண்டும்.

5. குழம்பு நன்கு கொதித்து சுண்டி வரும்போது மீன் சேர்த்து, 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைக்க வேண்டும்.

6. மீன் நன்கு வெந்ததும், இறக்கி கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான செட்டிநாடு மீன் குழம்பு ரெடி.
Previous Post Next Post