தேவையானவை:
- சிக்கன் 1/4 கிலோ
- முட்டை – 2
- வெண்ணெய் - 40 கிராம்
- மிளகுத் தூள் சிறிதளவு
- மக்காச்சோளம் மாவு - 4 டீஸ்பூன்
- உப்பு- தேவையான அளவு
- பாலாடை-சிறிதளவு
செய்முறை :
1. மிக்ஸியில்
முட்டைகளின் மஞ்சள் கரு மற்றும் சுத்தம் செய்து வைத்துள்ள சிக்கனின் சதைப் பகுதியை மட்டும் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
2 .அரைத்த
கலவையுடன், வெண்ணெய், மிளகு தூள், மக்காச்சோளம் மாவு, உப்பு, பாலாடை ஆகியவற்றை சேர்த்து நன்கு பிசைந்து
கொள்ளவும்.
3. இதனை சிறு உருண்டைகளாக உருட்டி வைத்துக்கொள்ளவும்.
4. இந்த உருண்டைகளை கொதிக்கும் எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொறித்து எடுத்தால் சுவையான சிக்கன் கோலா ரெடி.