-->

தயிர் சிக்கன் கிரேவி - Curd Chicken Gravy


ருசியான தயிர் சிக்கன் கிரேவி

தேவையானவை :

  1. கோழி - 1/2 கிலோ
  2. தயிர் - 1 கப்
  3. வெங்காயம் - 3
  4. தக்காளி - 3
  5. பச்சை மிளகாய் - 2
  6. மிளகாய்த்தூள் - 1ஸ்பூன்
  7. இஞ்சி பூண்டு விழுது - 1ஸ்பூன்
  8. மஞ்சள்த்தூள் - 1ஸ்பூன்
  9. தனியாத்தூள் - 1ஸ்பூன்
  10. சீரகத்தூள் - 1ஸ்பூன்
  11. உப்பு - தேவைகேற்ப
  12. எண்ணெய் - தேவைகேற்ப


செய்முறை:

1. மிக்சியில் வெங்காயம், தக்காளியையும் தனி தனியாக அரைத்து கொள்ளவும்

2. .ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்தவுடன் அரைத்த வெங்காயம் சேர்த்து வதக்கவும்.

3. இஞ்சி பூண்டு விழுது, பச்சைமிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள்த்தூள், ஆகியவற்றை சேர்த்து,அரைத்த தக்காளியையும் சேர்த்து பச்சை  வாசனை போகும் வரை வதக்கவும்.

4. இதனுடன்  நறுக்கிய கோழி தனியாத்தூள், சீரகத்தூள் உப்பு சேர்க்கவும், நன்றாக கொதி வந்தவுடன் தயிர் சேர்த்து கொதிக்கவிடவும்.குழம்பு திக்காக வந்தவுடன் இறக்கினால் சுவையான தயிர் சிக்கன் கிரேவி ரெடி!!!.



Previous Post Next Post