தேவையான பொருட்கள்:
- மட்டன் – 500 கிராம்
- கோங்குரா கீரை – 200 கிராம்
- மஞ்சள் தூள் - 1 ஸ்பூன்
- இஞ்சி,பூண்டு விழுது – சிறிதளவு
- கிராம்பு - 8
- ஏலக்காய் - 3
- பட்டை-1
- ஜீரகம் – 1 ஸ்பூன்
- பெரிய வெங்காயம் – 2
- மிளகாய்த்தூள் – 2 ஸ்பூன்
- தனியா தூள் – 2ஸ்பூன்
- கறிவேப்பிலை -தேவையான அளவு
- பச்சை மிளகாய் -8
- சிவப்பு மிளகாய் - 5
- கொத்தமல்லி தழை – தேவையான அளவு
- உப்பு – சிறிதளவு
- இதயம் நல்லெண்ணெய் – தேவையான அளவு
செய்முறை :
1. ஆட்டுகறியை நன்கு சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக
வெட்டி வைத்து கொள்ளவும்.
2. கறியுடன் சிறிதளவு மஞ்சள் தூள் ,உப்பு,இஞ்சி பூண்டு விழுது
சேர்த்து வேக வைத்து கொள்ளவும்.
3. வெங்காயத்தை பொடியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.
4. அடுப்பில் ஒரு வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றவும்.
5. எண்ணெய் காய்ந்ததும் பட்டை,கிராம்பு ஏலக்காய் சேர்த்து
தாளித்து,அத்துடன் மீதமுள்ள இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.
6. வதக்கிய பின் கோங்குரா இலை ,மிளகாய் தூள்,தனிய தூள்
,கறிவேப்பிலை,பச்சை மிளகாய்,வேகவைத்துள்ள கறி இவற்றை சேர்த்து மிதமான தீயில்
வைத்து கிளறி இறக்கவும்.
7. மற்றொரு வானலியில் நெய் ஊற்றி காய்ந்ததும் சிவப்பு மிளகாய்
தாளித்து,சிறிதளவு கொத்தமல்லி தழை தூவி இறக்கினால் சுவையான கோங்குரா மாம்சம்
தயார்.