உணவு
முறை
இன்றைய
உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் வாழ்க்கை முறையின் மூலம் எடை உயர்வு ஏற்படுகிறது.
இதனால் இளம் தலைமுறையினர் பெரும்பாலானோருக்கு சிறு வயதிலேயே தொப்பை உருவாகிறது. அதற்கு
காரணம் சரியான உடற்பயிற்சி இன்மையும்,சரியான நேரத்திற்கு உணவு உண்ணாமல் இருப்பதும்தான்.
தொப்பையை சரி செய்ய முதலில் செய்ய வேண்டியது ஜங்க் உணவுகள், துரித உணவுகள்,
பாக்கெட்களில் அடைத்து விற்கப்படும் உணவுகளை தவிர்த்து, தினமும் போதிய அளவில்
உடற்பயிற்சி செய்வது தான்.
தொப்பை
உருவாக காரணங்கள்
கடைகளில் அழகாகக் கவர்ச்சியான நிறங்களில் விற்கப்படும் செயற்கை
உணவு வகைகளை ஆசையைக் கட்டுப்படுத்த முடியாமல் உண்டு விட்டால் அதற்கு கிடைப்பது
நமது உடலின் அழகைக் குறைக்கும் இந்தத் தொப்பைதான். சரியான உடற்பயிற்சி இன்மையும்
தொப்பை உருவாவதற்கு ஒரு முக்கிய காரணமாகும்.
இதனால் தேவையற்ற கொழுப்புகள் உங்கள் வயிற்றில் சேர்ந்து அதுவே
பலவிதமான நோய்களுக்கு பிள்ளையார் சுழி போடுகிறது. இந்த உணவுகளில் இருக்கும் கெட்ட
கொழுப்புகளால் ஆண்களுக்கு ஆண்மைகுறைவு, மற்றும் பெண்களுக்குக் குழந்தையின்மை போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன.
தொப்பையை குறைக்க சில எளிய வழிகள்
ஒரு நாளைக்கு ஆறு முதல் எட்டு லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இவ்வாறு குடிப்பது உடலில் ஏற்படும்
வறட்சியைச் தவிர்ப்பதோடு உடலில் தங்கியிருக்கும் நச்சுப்பொருட்களை
வெளியேற்றுருகிறது. மேலும் அவ்வப்போது சீரான
இடைவெளியில் தண்ணீர் குடித்தால், உடலின் மெட்டபாலிசத்தை
அதிகரிக்கும். மேலும் கிராமங்களில் ஒரு பழமொழி சொல்வார்கள், அதாவது,
இளைத்தவனுக்கு எள்ளு... கொழுத்தவனுக்கு கொள்ளு..
இது பழமொழி மட்டுமல்ல.. இது உண்மையும் கூட.
1. கொள்ளுவை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதே போல் கொழுப்புத் தன்மையால் ஏற்பட்டிருக்கும் ஊளைச் சதையை குறைக்கும். மேலும் இதில் அதிக அளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளு உடலில் இருக்கும் கொழுப்பு ஊளைச்சதையைக் குறைப்பதோடு உடலுக்கு அதிக வலுவைக் கொடுக்கக் கூடியது.
2. வயிற்றைச் சுற்றி தொப்பையை ஏற்படுவதற்கு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வெள்ளை சர்க்கரையும் ஒரு காரணம். எனவே நாம் உண்ணும் உணவில் சர்க்கரைக்கு பதில் தேனை சேர்த்துக்கொண்டால் அது தொப்பையை குறைப்பதோடு, உடல் எடையையும் குறைக்கும்.
3. தினமும் உணவில் தயிரை சேர்த்து வந்தால், தயிரில் உள்ள குறைவான கலோரி மற்றும்
ஊட்டசசத்துக்களால், எடை குறைவதோடு, தொப்பையும் குறைய ஆரம்பிக்கும்.
4. வயிற்றைச் சுற்றியிருக்கும்
தொப்பையை குறைக்க ஒரே சிறந்த வழியென்றால், தினமும் காலையில் எலுமிச்சை ஜுஸ் போட்டு குடிப்பது
நல்லது, அதில் சிறிது உப்பு மற்றும் தேன்
சேர்த்து குடித்தால், நிச்சயமாக தொப்பை குறையும்.
இந்த வழி முறைகளை தொடர்ந்து பின்பற்றி வாருங்கள், உங்கள் தொப்பை
குறைவதோடு உங்களுக்கு அழகிய எடுப்பான தோற்றத்தையும் அளிக்கும்.