-->

இயற்கை முறையில் உடலில் உள்ள கெட்ட கொலஸ்டரலை குறைக்க வேண்டுமா?

கொலஸ்டிரால்என்ற வார்த்தையினை அனைவரும் நன்கு அறிந்து வைத்திருக்கின்றனர். இந்த பெயரே ஒரு வித பயத்தினை அனைத்து மக்களிடையேயும் எழுப்பி உள்ளது. கொலஸ்டிரால் மனித குலத்தின் எதிரி போல் பார்க்கப்படுகின்றது.

உடல் அடிக்கடி சோர்வாக இருக்கிறதா? உடல் எடை திடீரென்று அதிகரிக்கிறதா? ஜலதோஷம் அடிக்கடி ஏற்படுகிறதா? குறிப்பாக பெண்களுக்கு முடி கொட்டுகிறதா? அப்படி எனில் உங்கள் இரத்தத்தில் கொலஸ்டிரால் அதிகரித்து வருகிறது என்று அர்த்தம்.

உடனடியாக இரத்த பரிசோதனை செய்து கொலஸ்டிரால் அளவை தெரிந்து கொண்டு அதனை மருத்துவரின் ஆலோசனை கேட்டு சரி செய்து கொள்வது நல்லது. கொலஸ்டிராலின் அளவை இயற்கை முறையில் குறைக்க பின்வரும் உணவு பொருட்களை சாப்பிட்டு வருவதின் மூலம் கேட்ட கொலஸ்டிராலின் அளவு படிப்படியாக குறைந்து ஆரோக்கியமான உடலை நாம் பெறமுடியும்.

ஆனால் சில உணவுகளால் நம்முடைய உடலில் ஏற்படும் 'கெட்ட கொலஸ்டிரால் ' குறைக்க வழிகள் உண்டு.

ஓட்ஸ்
ஓட்ஸ் கஞ்சி என்பது வெள்ளை ஓட்ஸில் இருந்து செய்யப்படும் ஒரு பொதுவான உணவு. ஓட்ஸ் என்பது முழுமையான தானிய வகையை சேர்ந்தது. உடல் கொழுப்பு குறைந்து மெலிய விரும்புவர்களுக்கு பரிந்துரைக்கபடும் உணவு வகையில் முதன்மையாக இடம் பெறுவது ஓட்ஸ் ஆகும்.

பீன்ஸ்
கருப்பு பீன்ஸில் அளவுக்கு அதிகமான அளவில் ஃப்ளேவோனாய்டுகள் உள்ளன. இந்த உணவை அதிகம் சாப்பிட்டால், வயிற்றில் சேரும் கொழுப்புகள் குறையும் என்று ஆய்வுகள் பலவும் கூறுகின்றன. ஆகவே மறக்காமல் இந்த கருப்பு பீன்ஸை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள்.

வால்நட்
வால் நட் சாப்பிடுவதால் ரத்தத்தில் கொழுப்பு அளவு குறைந்து கொலஸ்ட்ரால் சம்பந்தமான நோய்கள் எதுவும் நெருங்குவதில்லை என மருத்துவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

அவகோடா
அவகோடாவை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் கெட்ட கொழுப்புகளை குறைத்து நல்ல கொழுப்புகளின் அளவை அதிகரிக்கும்.

மீன்
மனித மூளையின் பல்வேறு செயற்பாடுகளுக்கு அவசியத்தேவையாக இருக்கும் கொழுப்பு அமிலங்கள் மீன்களில் அதிக அளவு இருப்பது இதற்கான முக்கிய காரணமாக இருக்கக்கூடும் என்று விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். எனவே மீன் சாபிட்டால் கெட்ட கொழுப்பு குறைக்க உதவும்.

பூண்டு
கொழுப்பை குறைப்பதில் பூண்டுக்கு நிகர் பூண்டுதான்.பூண்டில் உள்ள நல்ல கொழுப்பு நம் உடலில் தேங்கி உள்ள கேட்ட கொழுப்பினை கரைக்க உதவுகிறது.

கொள்ளு

கொழுத்தவனுக்கு கொள்ளு,இளைத்தவனுக்கு எள்ளு என்பது பழமொழி,கொள்ளு நம் உடலில் உள்ள மிகுதியான கொழுப்பை சமன்படுதுகிறது.கொள்ளை இரவில் ஊற வைத்து கலையில் வெறும் வயிற்றில் சாப்பிடுவது மிகவும் நல்லது.
Previous Post Next Post