தேவையானவை;
- மீன் - அரை கிலோ
- மாங்காய் - 1
- சின்ன வெங்காயம் - 15
- தக்காளி - 2
- பச்சை மிளகாய் -2
- இஞ்சி - சிறியதுண்டு
- பூண்டு - 6 பல்
- கருவேப்பிலை,கொத்தமல்லி - சிறிது
- புளி - சிறிய எலுமிச்சை அளவு
- எண்ணெய் - 4 டேபிள் ஸ்பூன்
- கடுகு - அரை ஸ்பூன்
- வெந்தயம் - அரை ஸ்பூன்
- உப்பு - தேவைக்கு
- மிளகாய்த்தூள் - 1 1/2 டீஸ்பூன்
- மல்லித்தூள் - 3 டீஸ்பூன்
- சீரகத்தூள் - கால்ஸ்பூன்
- மிளகுத்தூள் - கால் ஸ்பூன்
- மஞ்சள் தூள் - அரை ஸ்பூன்
- தேங்காய்ப் பால் - 1 சிறிய கப்
செய்முறை :
1.முதலில் மீனை சுத்தம்
செய்து கழுவி மஞ்சள் தூள், உப்பு போட்டு அலசி வைக்கவும்.
2. வெங்காயம்,தக்காளி,இஞ்சி
பூண்டு,மல்லி
இலை பொடியாக நறுக்கிய வைக்கவும்.சிறிய மாங்காய் ஒன்றை துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.
3.தேவையான அளவு புளியை ஊற வைத்து ,தேங்காய் அரைத்து கொள்ளவும்.
4.கடையில்
எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு,வெந்தயம்,கருவேப்பிலை தாளித்து அத்துடன் வெங்காயம்,இஞ்சி,பூண்டு
சேர்த்து வதக்கவும்,தக்காளி,பச்சை மிளகாய்,சிறிது
உப்பு சேர்த்து மூடவும்.
5. அத்துடன்
மிளகாய்த்தூள்,மல்லித்தூள்,சீரகத்தூள்,மிளகுத்தூள்
சேர்த்து வதக்கி கரைத்த புளிக்கரைசலை சேர்த்து கொதிக்க விடவும்.
6. மசாலா வாசனை அடங்கி குழம்பு மணம் வரும்போது மீனை போடவும்.
7 .மீனை
சேர்த்த பிறகு சிறிது கொதி வரும்போது நறுக்கிய மாங்காய் துண்டுகளை சேர்க்கவும்
8.மாங்காயும் மீனும் வெந்து வரும் போது அரைத்த
தேங்காய் விழுதை சேர்க்கவும்.
9. நன்கு கொதிக்கும் வரை அடுப்பை மிதமான தீயில் வைக்கவும்.
10. குழம்பு கொதித்து எண்ணெய் பிரிந்து மேலே வந்ததும் மல்லி இல்லை தூவி இறக்கினால் சுவையான மாங்காய் மீன் குழம்பு ரெடி.
மேலும் பல மீன் உணவுகள் காண இங்கே click செய்யவும்.