-->

மைக்ரோவேவ் ஓவன் கிரில் சிக்கன் - Microwave Oven Grill Chicken


ரோஸ்டட் கிரில் சிக்கன்

தேவையான பொருட்கள்:
  1. சிக்கன் - 1/2 கிலோ (பெரிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்)
  2. மிளகாய் தூள் - 4 டேபிள் ஸ்பூன்
  3. இஞ்சி பூண்டு பேஸ்ட் - 4 டேபிள் ஸ்பூன்
  4. கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
  5. மிளகு தூள் - 1 டீஸ்பூன்
  6. மஞ்சள் தூள் - சிறிதளவு
  7. சோயா சாஸ் - 1 டீஸ்பூன்
  8. தயிர் - 1/2 கப்
  9. எலுமிச்சை சாறு - 2 டீஸ்பூன்
  10. முட்டை - 1
  11. உப்பு - தேவையான அளவு
  12. எண்ணெய் - சிறிதளவு


செய்முறை:
1.சிக்கனை நன்கு கழுவி சுத்தம் செய்து கொள்ளவும்.

2.மசாலா பொருட்கள் அனைத்தையும் சிக்கனோடு சேர்த்து 1 மணி நேரம் ஊற வைக்கவும்.

3.மைக்ரோவேவ் ஓவனை 200 டிகிரி சூடு பண்ணவும்.

4.இப்போது சிக்கனுடன் எண்ணெய் சிறிது சேர்த்து மைக்ரோவேவ் ஓவனில் வைக்ககூடிய உயரமான ட்ரேயில் வைத்து 300 டிகிரி சூட்டில் 20 நிமிடம் வைக்கவும்.

5.பிறகு அதை வெளியே எடுத்து சிக்கனை திருப்பி போட்டு மீண்டும் 20, நிமிடம் வைக்கவும்.

மிகவும் சுவையான கிரில் சிக்கன் ரெடி.
Previous Post Next Post