-->

மூளை பொரியல் - Moolai Poriyal

மூளை கறி தொக்கு

தேவையான பொருட்கள்:
  1. ஆட்டு மூளை - 2
  2. மிளகாய்தூள்1 1 / 2 ஸ்பூன்
  3. மஞ்சள்தூள் - 1/2 ஸ்பூன்
  4. மிளகு தூள் –  1ஸ்பூன்
  5. வெங்காயம் - 1/2 கப்
  6. சோம்பு - 1/2 ஸ்பூன்
  7. எண்ணைய் - 3 ஸ்பூன்
  8. உப்பு - தேவையான அளவு


செய்முறை:

1. ஆட்டு மூளையின்  மேல் பகுதியை தண்ணீரில் மெதுவாக கழுவி ஒரு கப் தண்ணீர் விட்டு மூடி வேக வைக்கவும்.

2. மூளை நன்றாக வெந்தபின் இறக்கி ஆறவைத்து துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

3. நறுக்கிய துண்டுகளை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் மிளகாய்தூள், மிளகு தூள்,மஞ்சள்தூள், உப்பு சேர்த்து மெதுவாக கிளறி விடவும் .

4. பெரிய வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கி கொள்ளவும்.

5. வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணைய் விட்டு காய்ந்தவுடன் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு வதக்கவும்.

6. வெங்காயம் பொன்னிறமாக சிவந்தவுடன் வேக வைத்த மூளை மசாலாவை  சேர்த்து மிக மெதுவாக கிளறி இறக்கினால் ருசியான மூளை பொரியல் ரெடி.




Previous Post Next Post