-->

பீனிக்ஸ் பறவை போல மீண்டு வரும் மும்பை இந்தியன்ஸ் அணி

மீண்டும் மும்பை இந்தியன்ஸ்

MI vs KKR

இந்த ஐபிஎல்லில் தொடர்ந்து தோல்விகளை சந்தித்து வந்த மும்பை இந்தியன்ஸ் அணி, கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் ஆபார வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் நான்காவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

மீண்டு வரும் மும்பை

கடும் சரிவிலிருந்து அந்த அணி பீனிக்ஸ் பறவை போல மீண்டு வருகிறது. மும்பை அணியின் ஆட்டம் 2015 ஐபிஎல் போட்டியை நினைவுபடுத்துகிறது. இந்த ஆண்டுக்கான ஐபிஎல் போட்டிகளில் நடப்பு சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் முதலில் ஆடிய ஆட்டங்களில் பரிதாபமாக தோல்வியை தழுவி வந்தது. இதனால் கடும் விமர்சங்களுக்கு ஆளானது அந்த அணி.

தொடர் தோல்வி

முதல் ஆட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிடம் ஒரு விக்கெட்டில் தோல்வி அடைந்தது. தொடர்ந்து ஹைதராபாத், டெல்லி அணிகளிடம் தோல்வியடைந்தது. நான்காவது ஆட்டத்தில் பெங்களூர் அணியை வென்றது. ஐந்தாவது ஆட்டத்தில் ராஜஸ்தான், 6வது ஆட்டத்தில் ஹைதராபாத் அணிகளிடம் தோல்வியடைந்தது.

கடைசி இடம்
ஏழாவது ஆட்டத்தில் சிஎஸ்கேவை வென்று பழி தீர்த்த மும்பை அணி, அதற்கடுத்த ஆட்டத்தில் பெங்களூருவிடம் தோல்வியடைந்தது. 8 போட்டிகளில் 2ல் மட்டுமே வென்று பரிதாப நிலையில் புள்ளிப் பட்டியலில் கடைசி இடத்தில் இருந்தது.

முன்னேற்றம்

பின்பு பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகளை வென்று, 10 ஆட்டங்களில் 4ல் வெற்றி, 6ல் தோல்வியுடன் 5வது இடத்துக்கு முன்னேறியது. நேற்று நடந்த போட்டியில் கொல்கத்தாவை மீண்டும் ஒரு முறை வென்று, 10 புள்ளிகளைப் பெற்று 4வது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

கோப்பையை வென்றது

கடந்த 2015லும் இதேபோன்ற நிலையில் தான் மும்பை அணி இருந்தது. மொத்தம் விளையாடிய 14 ஆட்டங்களில் 8ல் வெற்றி, 6ல் தோல்வியுடன் 16 புள்ளிகளைப் பெற்று பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. முதல் 6 ஆட்டங்களில் ஒரு வெற்றி பெற்று இருந்த மும்பை, கடைசியாக நடந்த 8 ஆட்டங்களில் 7 வெற்றிகளைப் பெற்ற பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. 

முதல் குவாலிபையரில் சென்னையை வென்று பைனல்ஸ் சென்றது. அதிலும் சென்னை அணியை வென்று கோப்பையை தட்டிச் சென்றது.

2015ல் நடந்ததைப் போலவே, தற்போதும் கடைசி இடத்தில் இருந்து மீண்டு பிளே ஆப் சுற்றுக்கு முன்னேற போராடி வருகிறது.
Previous Post Next Post