-->

மட்டன் சுக்கா - Mutton Chukka

மட்டன் தொக்கு செய்வது எப்படி

தேவையானவை:
  1. மட்டன் ஒரு கிலோ
  2. வெங்காயம் இரண்டு
  3. தக்காளி இரண்டு
  4. இஞ்சி பூண்டு விழுது ஒரு டீஸ்பூன்
  5. மிளகாய் வத்தால் ல் ஐந்து
  6. முழுப்பூண்டு ஒன்று
  7. மிளகுத்தூள் இரண்டு டீஸ்பூன்
  8. ஜீரகத்தூள் அரை டீஸ்பூன்
  9. மஞ்சள்த்தூள் அரை டீஸ்பூன்
  10. மிளகாய்த்தூள் இரண்டு டீஸ்பூன்
  11. சோம்பு அரை டீஸ்பூன்
  12. எண்ணெய் ஒரு டேபிள் ஸ்பூன்
  13. உப்பு ஒன்றரை டீஸ்பூன்
  14. முந்திரி 10

செய்முறை:

1. முதலில் மட்டனை சிறு சிறு துண்டுகளாக வெட்டி, நன்கு கழுவி வைத்துக்கொள்ளவும்.

2. முந்திரியை சிறிது எண்ணெயில் பொன்னிறமாக வறுத்து வைத்துக்கொள்ளவும்.

3.ஒரு குக்கரில் மட்டன், வெங்காயம், தக்காளி, ஒன்றரை டீஸ்பூன் மிளகாய்த்தூள்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்,

4. பின் ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், ஒரு டீஸ்பூன் ஜீரகத்தூள்,ஒன்றரை டீஸ்பூன் உப்பு மற்றும் ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி இரண்டு விசில் வரும்வரை வேகவைக்கவும்.

5. ஒரு பெரிய கடாயில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும், சோம்பு மற்றும் மிளகாய் வற்றலைப்போட்டு தாலிக்கவும்.

6. றகு அதில்  அரை டீஸ்பூன் மிளகாய்த்தூள் மற்றும் கறிவேப்பிலை போட்டு கிளறிவிட்டு, பின் வேகவைத்த மட்டன் குழம்பை சேர்த்து வதக்கவும்.

7. மட்டன் நன்கு வெந்தவுடன் நசுக்கிய பூண்டு, ஒரு டீஸ்பூன் மிளகுத்தூள், வருத்த முந்திரியை சேர்த்து தண்ணீர் சுண்டும் வரை வேக வைத்து இறக்கினால் சுவையான மட்டன் சுக்கா ரெடி.
.


Previous Post Next Post