தேவையான பொருட்கள்:
- மட்டன் எலும்பு - 1 கப்
- துவரம் பருப்பு - 1/2 கப்
- கடலைபருப்பு - 1/2 கப்
- நறுக்கிய வெங்காயம் - 1/4 கப்
- தக்காளி - 1/2 கப்
- இஞ்சி பூண்டு விழுது - 1 டேபிள்ஸ்பூன்
- பிரிஞ்சி இலை - 1
- பட்டை - 1
- கிராம்பு - 1 - 2
- வெங்காயம் - 1/2 கப்
- தக்காளி - 1/4 கப்
- கத்தரிக்காய் - 2
- கறிவேப்பிலை - சிறிதளவு
- மிளகாய் பொடி - 1 டேபிள்ஸ்பூன்
- மல்லி பொடி - 2 டேபிள்ஸ்பூன்
- கொத்தமல்லி இலை - சிறிதளவு
- எண்ணெய் - 1 - 2 டேபிள்ஸ்பூன்
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1. கடலை பருப்பு, துவரம் பருப்பு, மட்டன் எலும்பு, வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது, தக்காளி, பிரிஞ்சி இலை சேர்த்து குக்கரில் (4 விசில்)
விட்டு வேக வைத்து கொள்ளவும்.
2. ஒரு பாத்திரத்தில் எண்ணெயை ஊற்றி காய வைத்து பட்டை, கிராம்பு, கறிவேப்பிலையை
சேர்த்து வெங்காயம், தக்காளியை வதக்கவும்.
3.அதில் மிளகாய்தூள், மல்லி தூள் சேர்த்து பச்சை வாசனை போகும் போகும் வரை வதக்கவும்,
4. பின் கத்தரிக்காயை
சேர்த்து வேகவைக்கவும்.
5.பின்னர் வேகவைத்த பருப்பு கலவை, உப்பு
சேர்த்து 10 நிமிடம் மிதமான தீயில் வேக வைத்து இறக்கினால் சுவையான மட்டன் சால்னா
ரெடி
.