-->

கண்ணீர் வரவழைக்கும் நாஞ்சில் விஜயனின் கடந்த கால வாழ்க்கை

நாஞ்சில் விஜயன் வாழ்க்கை

நாஞ்சில் விஜயன்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் அது இது எதுநிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் நாஞ்சில் விஜயன். பெண் வேடங்களில் அச்சு அசலாக பெண் போலவே வேடமிட்டு நடித்து அசத்தியவர். தனக்கு வரும் கேலி, கிண்டல்களை பொருட்படுத்தாமல் தன்னை நம்பி வரும் ரசிகர்களை ஏமாற்றமல் சிரிக்க வைப்பதில் கில்லாடி.

கடந்த காலம்
திரைக்கு முன்னால் நம்மை வயிறு குலுங்க சிரிக்க வைக்கும் விஜயனுக்கு மிகவும் சோகமான கடந்த காலம் உண்டு. இவர் மிகவும் சாதாரணமான குடும்ப பின்னணியில் இருந்து வந்தவர். மிகவும் சிரமப்பட்டு தான் இவரின் அம்மா இவர்களை வளர்த்திருக்கிறார். இவரின் அம்மா, தனது கணவருடன் ஏற்பட்ட பிரச்சனையில் தீ வைத்து தற்கொலை செய்துகொண்டாராம்.
அதிர்ச்சி
இதனை கண் முன்னே பார்த்து விஜயன் அதிர்ச்சி ஆகியிருக்கிறார். அப்பாவும் கைவிட ஆதரவற்ற நிலையில் சந்தைகளில் பழம் விற்பாராம் விஜயன். இவரின் பெரியம்மா வீட்டார் தான் இன்று வரை அவருக்கு உறவாக இருக்கிறார்களாம். இவருக்கு ஒரு தம்பி, தங்கை இருக்கிறார்களாம். தற்போது இவர்களையும் இவர்தான் பார்த்து கொள்கிறாராம். இதை அவரே அண்மையில் ஒரு ஊடக நேர்காணலில் சொல்லியிருந்தார்.
என்னமா இப்படி பண்றீங்களேமா நாஞ்சில் விஜயன்
திறமை
விஜயன் நாகர்கோவிலில் பாலிடெக்னிக் படித்து கொண்டு இருந்தார். பின்னர் படிப்பை பாதியில் விட்டுவிட்டு தனது திறமையை மட்டுமே நம்பி சென்னைக்கு வந்திருக்கிறார். ஆரம்பத்தில் விஜய் டிவியில் அது இது எது நிகழ்ச்சிக்கு ஆட்களை கூடி வரும் ஒருங்கிணைப்பாளர் வேலை தான் அவருக்கு கொடுக்கபட்டிருக்கிறது.
பின்னர் படிப்படியாக தனது திறமையின் மூலம் அந்த நிகழ்ச்சியில் தனக்கென ஒரு இடத்தை உருவாக்கி கொண்டார். தற்போது படங்களிலும் நடித்து வருகிறார். திறமை இருந்தால் எதையும் வெல்லலாம் என்பதற்கு இவர் ஒரு உதாரணம்.
Previous Post Next Post