தேவையான பொருட்கள்:
- நண்டு - 1 கிலோ
- தக்காளி - 200 கிராம்
- இஞ்சி - சிறிய துண்டு
- பூண்டு பல் - 6
- வெங்காயம் - 200 கிராம்
- தேங்காய் துருவல் - 4 டேபிள்ஸ்பூன்
- முந்திரி பருப்பு -8
- மிளகாய்த்தூள் – 1 ½ டீஸ்பூன்
- கரம் மசாலா – 1/2 டீஸ்பூன்
- பச்சை மிளகாய் - 2
- மல்லித்தூள் -3 டீஸ்பூன்
- மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
- மஞ்சள்தூள் - 1/2 டீஸ்பூன்
- சீரகம் - 1 டீஸ்பூன்
- பெருஞ்சீரகம் - 1 டீஸ்பூன்
- எண்ணெய் - 100 மில்லி
- மல்லி,கருவேப்பிலை - சிறிது
- உப்பு – தேவையான அளவு
செய்முறை:
1.ஒரு பாத்திரத்தில் நன்கு சுத்தம் செய்த நண்டை எடுத்து கொள்ளவும். அத்துடன் இரண்டு டம்ளர்
தண்ணீர் சேர்த்து, சிறிது உப்பு, மஞ்சள் தூள் சேர்த்து 10 நிமிடம் வேக வைக்கவும்.
2.மிக்சியில் துருவிய தேங்காய், முந்திரி, பச்சை
மிளகாய், மல்லி இலை, சீரகம், சோம்பு போட்டு அரைத்து வைத்து கொள்ளவும்.
3.இஞ்சி பூண்டை நன்கு தட்டி வைக்கவும்.ஒரு வாணிலியில் எண்ணெய் விட்டு
காய்ந்ததும் கருவேப்பிலை,நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின் வதங்கிய
வெங்காயத்துடன் தட்டி வைத்துள்ள இஞ்சி பூண்டு,கரம் மசாலா சேர்த்து வதக்கவும்.
4.இதனுடன் நறுக்கிய தக்காளி சேர்க்கவும், நன்றாக வெந்தவுடன், மிளகாய்த்தூள், மல்லித்தூள் சேர்த்து சிறிது தண்ணீர் தெளித்து மூடி விடவும். பின் வேகவைத்த
நண்டை சேர்த்து நன்கு மசாலாவுடன் சேர்த்து கிளறவும்.
5.பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து ஒரு கப் தண்ணீர் விடவும். நன்கு
கொதித்து தேங்காய் வாசனை அடங்கியதும் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டி இறக்கினால் சுவையான நண்டு கிரேவி ரெடி.