-->

நண்டு குருமா - Nandu Kuruma



சுவையான நண்டு குருமா
தேவையான பொருட்கள்:

  1. நண்டு - 2 கிலோ
  2. எண்ணெய் -  100 மிலி
  3. தேங்காய் பால் - 2 டம்ளர்
  4. இஞ்சி, பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
  5. மல்லிதழை - சிறிதளவு
  6. கறிவேப்பிலை -  ஒரு கொத்து
  7. கர மசலாத்தூள் - ½ டீஸ்பூன்
  8. வெங்காயம் - 2
  9. தக்காளி - 1
  10. பச்சைமிளகாய் - 2
  11. மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்


அரைத்து கொள்ள தேவையானவை:

  1.  தேங்காய் துருவல் _ ஒரு கப்
  2. மஞ்சள்தூள் - 2 டீஸ்பூன்
  3. மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
  4. மல்லித்தூள் -3 டீஸ்பூன்
  5. சீரகத்தூள் - 2 டீஸ்பூன்
  6. சோம்புத்தூள் - 1 டீஸ்பூன்
  7. முந்திரி - 6
  8. பாதாம் - 6
  9. பூண்டு - 5 பல்

  
செய்முறை:

1.நண்டை நன்கு கழுவி சுத்தம் செய்து எடுத்து கொள்ளவும்.அரைத்த மசாலாவை பாத்திரத்தில் எடுத்து தேங்காய் பாலுடன் மேலும் இரண்டு டம்ளர் தண்ணீர், சிறிதுளவு உப்பு சேர்த்து கரைத்து விட்டு மல்லிதழையை சேர்த்து கொள்ளவும்.

2.வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை நறுக்கி வைத்து கொள்ளவும்.
ஒரு அகலமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை வெங்காயம், தக்காளி, பச்சைமிளகாயை சேர்த்து அரை ஸ்பூன் உப்பும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.

 3. அனைத்தும் நன்கு வதங்கியதும், இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள்,  கரம் மசாலாத்தூள் சேர்த்து இரண்டு நிமிடம் வதக்கவும்.

4.இப்போது கரைத்து வைத்திருக்கும் கலவையை ஊற்றி நண்டை சேர்த்து கொதிக்க விடவும்.இரண்டு கொதி வந்ததும் இறக்கினால் சுவையான நண்டு குருமா ரெடி.



Previous Post Next Post