-->

நண்டு சூப் - Nandu Soop


காரசாரமான நண்டு சூப் வேணுமா

தேவையான பொருட்கள்:

  1. நண்டு - 2
  2. வெங்காயம்- 1
  3. பச்சை மிளகாய் -2
  4. மிளகு -சிறிதளவு
  5. தக்காளி -2
  6. மைதா -1 டேபிள் ஸ்பூன்
  7. உப்பு -தேவையான அளவு


செய்முறை:

1.நண்டை நன்கு சுத்தம் செய்து அதன் மேல் மஞ்சள்தூள் சேர்த்து கழுவிக் கொள்ள வேண்டும்.

2. ஒரு வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய், மிளகு, தக்காளியை வதக்கி கொள்ள வேண்டும்.

 3. நன்கு வதங்கிய பின் அதில் நண்டைப் போட்டுத் தேவையான நீர் விட்டு வேக வைக்க வேண்டும்.

4.வெந்ததும் நண்டைத் தனியே எடுத்துவிட்டு மைதா மாவை நீரில் கரைத்து கொதிக்கும் கலவையில் ஊற்றவும்.

 5. ஒரு கொதி வந்ததும் இறக்கி சூடாக பரிமாறினால் சுவையான நண்டு சூப் ரெடி.

Previous Post Next Post