-->

நாயகி சீரியல் ஆனந்தியை பற்றி தெரியுமா?


நாயகி சீரியல் விஜயலட்சுமி

விஜயலட்சுமி
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் நாயகிசீரியலில் ஆனந்தி என்கிற கதாபாத்திரத்தில் நடித்து வருபவர் நடிகை விஜயலட்சுமி. விஜயலட்சுமி 1990ம் ஆண்டு பிறந்தார். இவர் காதல் கோட்டை படத்திற்காக தேசிய விருது வாங்கிய பிரபல இயக்குனர் அகத்தியனின் மகள் ஆவார். இவருக்கு கார்த்திகாமற்றும் நிரஞ்சனிஎன இரு சகோதரிகள் உள்ளனர்.  இவர் சினிமாவுக்கு வருவதற்கு முன் விஜய் டிவியில் ஒளிபரப்பான ஹலோ தமிழா என்னும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
சினிமா
இவர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான சென்னை – 28’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து மிஷ்கினின் அஞ்சாதே’, ‘கற்றது களவுமற்றும் 10க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். சமீபத்தில் இவர் நடித்து வெளியான 'சென்னை 600028-2’ திரைப்படம் வெற்றிப்பெற்றாலும் தொடந்து இவருக்கு படங்களில் நடிக்க வாய்புகள் கிடைக்கவில்லை.
திருமணம்
இவர் தனது நீண்டகால நண்பரான பெரோஷ் முஹம்மதுஎன்பவரை திருமணம் செய்து கொண்டார். பெரோஷ் முஹம்மது’ ‘வல்லினம்மற்றும் ஈரம்படங்களில் துணை இயக்குனாராக பணியாற்றியுள்ளார். இந்த தம்பதிக்கு ஒரு குழந்தை உள்ளது. இவரது கணவர் இயக்கிய பண்டிகைபடத்தை விஜயலட்சுமியே தயாரித்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவிற்கு வெற்றிப்பெறவில்லை எனினும் ரசிகர்களிடம் நல்ல விமர்சனங்களைப் பெற்றது.
நாயகி
தற்போது இவர் சன் டிவியில் வரும் நாயகி சீரியலில் ஹீரோயினாக நடித்து வருகின்றார். இவருடன் பிரபல நடிகை அம்பிகாவும் நடித்து வருகிறார். பெரிய ஹீரோயினாக வருவார் என்று எதிர்ப்பார்க்கப்பட்டவர், படங்களில் நடிக்க வாய்புகள் கிடைக்காததால் கடைசியாக சீரியலுக்கு வந்துவிட்டார்.
நாயகி சீரியலில் விஜயலட்சுமியின் நடிப்பு எப்படி? உங்கள் கருத்துகளை கமெண்ட் பாக்ஸ்ல் தெரிவியுங்கள். 
Previous Post Next Post