தேவையான பொருட்கள்:
- சிக்கன் - 1/2 கிலோ
- வெங்காயம் - 2 (நறுக்கியது)
- இஞ்சி பூண்டு விழுது - 1 1/2 டேபிள் ஸ்பூன்
- தக்காளி - 1 (நறுக்கியது)
- மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
- மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
- எலுமிச்சை சாறு - 2 டேபிள் ஸ்பூன்
- கறிவேப்பிலை - சிறிது
- உப்பு - தேவையான அளவு
- எண்ணெய் - தேவையான அளவு
அரைப்பதற்கு:
- சீரகம் - 1 டீஸ்பூன்
- சோம்பு - 1 டீஸ்பூன்
- கசகசா - 1 டீஸ்பூன்
- பட்டை - 1 இன்ச்
- ஏலக்காய் - 2
- துருவிய தேங்காய் - 5 டேபிள் ஸ்பூன்
- முந்திரி - 8
- பச்சை மிளகாய் - 4
- கொத்தமல்லி - 1 கப் ( பொடியாக நறுக்கியது)
- புதினா - 1 கப் ( பொடியாக நறுக்கியது)
- தண்ணீர் - 3 1/2 கப்
செய்முறை:
1.முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில்
சீரகம், சோம்பு, கசகசா, ஏலக்காய் மற்றும் பட்டை சேர்த்து சிவக்க வறுத்து கொள்ள வேண்டும்.
2.பின் அதை குளிர வைத்து, மிக்ஸியில் போட்டு அரைத்து, அத்துடன்
முந்திரி, தேங்காய்,கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சிறிது நீர் சேர்த்து நன்றாக அரைத்துக் கொள்ள
வேண்டும்.
3.பின்னர் மற்றொரு அடுப்பில் வாணலியை வைத்து, அதில்
கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, நறுக்கிய வெங்காயத்தை போட்டு பொன்னிறமாக வதக்க வேண்டும்.
4.பின்னர் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து 3 நிமிடம்
வதக்கி, தக்காளி, மிளகாய் தூள், மஞ்சள் தூள் மற்றும் உப்பு சேர்த்து 4-5 நிமிடம்
வதக்க வேண்டும்.
5.அடுத்து அரைத்து வைத்துள்ள மசாலா சேர்த்து 7-8 நிமிடம் கிளறி விட வேண்டும்.பின்னர் எலுமிச்சை சாறு மற்றும் சிக்கன்
துண்டுகள் சேர்த்து, 3 கப் தண்ணீரை ஊற்றி, 20-30 நிமிடம் மூடி வேக வைத்து இறக்க வேண்டும்.
சுவையான ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் குருமா ரெடி.