-->

சுறா பூண்டு குழம்பு - Sura Garlic Kuzhambu



சுறா குழம்பு


தேவையான பொருட்கள்:
  1. சுறா மீன் - அரை கிலோ
  2. பூண்டு - 3
  3. மிளகுத்தூள் - 3 தேக்கரண்டி
  4. மிளகாய்த்தூள் - 2 தேக்கரண்டி
  5. தனியாத்தூள் - 3 தேக்கரண்டி
  6. மஞ்சள்தூள் - 1/2 தேக்கரண்டி
  7. பச்சைமிளகாய் - 3 கீறியது
  8. கடுகு - 1 தேக்கரண்டி
  9. கறிவேப்பிலை - சிறிதளவு
  10. சீரகம் - 1 தேக்கரண்டி
  11. புளி - எலுமிச்சம் பழ அளவு
  12. வெந்தயம் - 1 தேக்கரண்டி
  13. வெங்காயம் – 200 கிராம்
  14.  தக்காளி - 200 கிராம்
  15. கொத்தமல்லி இலை - அரை கட்டு
  16. உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

1. ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் கடுகு, வெந்தயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

2.அதனுடன் வெங்காயம் சேர்த்துப் பொன்னிறமாக வதக்கவும். உரித்து வைத்துள்ள பூண்டு , தக்காளி சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

3. பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள் தூள் இவற்றைச் சேர்த்து சிறிது நீர் விடவும்.போதுமான உப்பு சேர்க்கவும், அதனுடன் சுறா மீனை சேர்த்து வேகவிடவும்.

4. சுறா வெந்தவுடன் கரைத்த புளியை சேர்க்கவும். அதனுடன் சீரகம், மிளகுத்தூள் ஆகியவற்றையும் சேர்த்து குழம்பு நன்கு கெட்டியானவுடன், கொத்தமல்லி இலை தூவி இறக்கிப் பரிமாறவும்.
சுவையான சுறா பூண்டு குழம்பு ரெடி.


Previous Post Next Post