நல்ல ஆரோக்கியமான தலை முடி ஒருவரின் அழகினை
வெளிக்காட்டுவதில் முக்கிய பங்கு வகிக்கிறது.நாம் உண்ணும் உணவில் உள்ள ஊட்டச்சத்து
குறைபாடு,பழக்க வழக்கங்கள்,வாழ்க்கை முறை,ஆகியவற்றால் நாம் அதிகம் பதிக்கப்பட்டு
முடி கொட்டுதல்,தலை முடி உதிர்வு,இளநரை,போன்றவை ஏற்படுகிறது.
உங்கள் தலை முடி உதிர்வதை கண்டு மிகவும்
கவலைபடுகிறீர்களா? இனி அந்த கவலையே வெண்டாம் உங்களுக்கு. என்னடா இந்த இளம்
வயதிலியே நமக்கு வழுக்கை வந்து விட்டதே என்று கவலை கொள்ளும் ஆண்களுக்கும்,
நீண்ட,அடர்த்தியான,கருமையான கூந்தலை விரும்பும் பெண்களுக்கும் இதோ வந்து விட்டது தீர்வு.
உங்கள் அணைத்து விதமான தலை முடி பிரச்சனைகளை சரி
செய்யும் எளிய முறைகளை பார்க்கலாம் வாங்க..
தலை வழுக்கை
தலை வழுக்கையாக இருப்பவர்கள், கீழாநெல்லி வேரை எடுத்து சுத்தம் செய்து அதனை சிறுசிறு துண்டுகளாக்கி தேங்காய்
எண்ணெயில் போட்டு காய்ச்சி அதனை தொடர்ந்து தலையில் தடவி வந்தால் வழுக்கை சில
நாட்களிலேயே மறைந்து முடி வளர ஆரம்பித்து விடும்..
முடி உதிர்வதை தடுக்க
தினசரி வெயிலில்
அலைந்து திரிந்து வாழ்க்கையை ஓட்டுகின்ற காலத்தில் நாம் இருக்கிறோம். தினமும் உச்சந்தலையில் ஒரு விரல்
சுத்தமானவிளக்கெண்ணெயைத் தடவி வந்தால் கண்ணுக்குக் குளிர்ச்சி, முடியும் உதிராது.வெந்தயம், குன்றிமணியை பொடி செய்து, அதனை தேங்காய் எண்ணெயில்
ஒரு வாரம் ஊற வைக்க வேண்டும்.
பிறகு தினமும் அதனை காலையில் தலையில் தேய்த்து வந்தாலும் முடி உதிர்வதைத் குறைக்கலாம்.
இளநரையை போக்க
இளம் வயதிலேயே நரை முடியினால் பாதிக்கப்படுபவர்கள்
தினமும் நெல்லிக்காயை தொடர்ந்து சாப்பிட்டு வந்தாலே போதும் இளநரை மாயமாகிவிடும். வைட்டமின் ‘பி’ காம்ப்ளெக்ஸ் குறைபாட்டினால் விரைவில் தலைமுடி
வெளுக்க ஆரம்பிக்கும். ஊட்டமிக்க உணவு இந்த குறைபாட்டை நீக்கும்
.
நீண்ட கூந்தலை பெற
நீண்ட கருமையான கூந்தல் பெண்களின் அழகிற்கு
மேலும் அழகு சேர்க்கும் ஒன்றாகும்.வேப்பிலை ஒரு கையளவு எடுத்து அதனை தண்ணீரில் போட்டு
கொதிக்க வைத்துவிட்டு மறுநாள் அந்தச் சாறு எடுத்து தலையைக் கழுவிக் கொள்ள வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செய்தால் முடி உதிர்வது குறைய தொடங்கி நீண்ட கூந்தல் வளர
ஆரம்பிக்கும்.
அடர்த்தியான கூந்தலுக்கு
நம் வீட்டில் இருக்கும் செம்பருத்தி பூ இலை,கறிவேப்பிலை,மஞ்சள்
கரிசலாங்கண்ணி,மூன்றையும் அரைத்து சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வெயிலில் காய
வைத்து அதனை நாம் உபயோகிக்கும் தேங்காய் எண்ணெயில் போட்டு காய்ச்சி பிஇந் வடிகட்டி
தினமும் உபயோகித்து வர அடர்த்தியான கூந்தலை பெறலாம்.
கருமையான தலை முடி
பச்சைபயறு,பூலாங்கிழங்கு இரண்டையும் கலந்து அரைத்து வைத்துக்கொள்ளவும்.அதில் சிறிது
எடுத்து தயிர் கலந்து தலையில் தடவி ஊறவைத்து குளித்து வந்தால் கருமையான கூந்தலை
பெற முடியும்.