-->

அகத்திக் கீரை சாம்பார் - Agathi Keerai Sambar


உடலை சுத்தம் செய்ய உதவும் அகத்தி கீரை

தேவையான பொருட்கள்
  1. அகத்திக் கீரை ஒரு கட்டு 
  2. புளி – 50 கிராம் 
  3. தனியா ஒரு ஸ்பூன் 
  4. கடுகு அரை ஸ்பூன் 
  5. சின்ன வெங்காயம் – 25 கிராம் 
  6. தக்காளி அரை மூடி 
  7. எண்ணெய் – 2 ஸ்பூன் 
  8. துவரம் பருப்பு ஒரு கப் 
  9. மிளகாய் வற்றல் – 2 
  10. பெருங்காயம், மஞ்சள்தூள், உப்பு தேவையான அளவு 


செய்முறை 

1. முதலில் அகத்திக் கீரையைத் தண்ணீரில் அலசி, சுத்தப் படுத்திக்கொள்ளவும். 
2. அடுத்து, தனியாவை வறுத்து பொடித்து செய்து கொள்ளவும். 
3. தேங்காயைத் துருவி வைத்துக் கொள்ளவும். 
4. வெங்காயத்தை நறுக்கிக்கொள்ளவும். 
5. துவரம் பருப்பை மஞ்சள், பெருங்காயம் சேர்த்து வேக வைத்து நன்றாக கடைந்துகொள்ளவும். 
6. புளியை இரண்டு கப் தண்ணீரில் கரைத்து வடித்துக்கொள்ளவும். 
7. வாணலியில் எண்ணெய் விட்டு, மிளகாய் வற்றல், தக்காளி,வெங்காயம்  ஆகியவற்றைப் போட்டு வதக்கி, ஏற்கெனவே தயாரித்து வைத்துள்ள அனைத்தையும் ஒவ்வொன்றாகக் கலந்து, உப்பு சேர்த்து கொதிக்கவைக்கவும்.
8. பொடி வாசனை அடங்கியதும் கீரையை சேர்த்து கொதிக்க விடவும்  கடுகு, பருப்பு தாளித்து கொட்டவும். 
9. பின் கடுகு ,காய்ந்த மிளகாய் ,கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

மாதம் ஒரு முறை இக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்வதின் மூலம் நம் உடலில் உள்ள தேவையற்ற அழுக்குகள் நீங்கி உடல் சுத்தமாகும்,பார்வை கோளாறுகள் சரியாகும்,வாயு தொல்லை நீங்கும்.
Previous Post Next Post