-->

அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

அனுஷம் நட்சத்திரம் வாழ்க்கை முறை


அனுஷம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : அனுஷம்
அனுஷம் நட்சத்திரத்தின் ராசி : விருச்சிகம்
அனுஷம் நட்சத்திரத்தின் அதிபதி : சனி
அனுஷம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி :
 செவ்வாய்

அனுஷம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

இவர்கள் மற்றவர்களை போல் அல்லாமல் சற்று வித்தியாசமான மனநிலையை கொண்டிருப்பார்கள். எந்த உயிரினத்துக்கும் தீங்கு விளைவிக்க கூடாது என நினைப்பவர்கள். ஆனால் தேவை ஏற்பட்டால் எந்த எல்லைக்கும் போக தயங்க மாட்டார்கள்.

தங்கள் மனதில் ஏற்படும் வலியை யாருடனும் பகிர்ந்து கொள்ள மாட்டார்கள். தவறு செய்தால் தவறாது தண்டிப்பார்கள். கோபத்தில் கடுமையான வார்த்தையை பிரயோகிப்பார்கள். இவர்கள் சிக்கனமாக வாழ்க்கையை நடத்துவார்கள். புண்ணிய காரியங்கள் செய்வதில் விருப்பமுடையவர்கள்.

எல்லா விஷயங்களையும் தெரிந்து வைத்திருக்க என நினைப்பார்கள்.. பசியை பொறுத்து கொள்ள மாட்டார்கள்.  இரவு பகல் பாராமல் உழைக்கும் கடுமையான உழைப்பாளிகள். நயமாக பேசுவதில் வல்லவர்கள். பிறர் மனம், மற்றும் குணம் இவற்றை அறிந்து செயல்படுவதில் வல்லவர்கள்.

அனுஷம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் ஆழ்ந்த கூர்மையான அறிவை உடையவர்கள். உண்மையை பேச விரும்புவார்கள். இவர்களுக்கு தர்ம சிந்தனை அதிகம் இருக்கும். இவர்களுக்கு தனம்பிக்கை குறைவு. பசியை பொறுக்க மாட்டார்கள். வைராக்கியம் அதிகம் இருக்கும். 

அனுஷம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள்அழகாக இருக்க விரும்புவார்கள். பொறுப்புணர்ச்சி அதிகம் கொண்டவர்கள். இசையில் ஆர்வம் உள்ளவர். வாய் சொல்லில் வீரராக இருப்பார்கள். சற்று கஞ்சத்தனம் உடையவர்கள்.

அனுஷம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் சிறந்த கல்வியறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். பாசமாக இருப்பதை விரும்புவார்கள். குடும்பத்தின் கஷ்ட, நஷ்டங்களை அறிந்து நடப்பார்கள். சுக போகமாக இருப்பதை விரும்புவர்.

அனுஷம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை உண்டு. இவர்களுக்கு வாழ்கையில் ஏற்ற தாழ்வுகள் அதிகம் இருக்கும். பொதுவாக தாழ்வு மனப்பான்மை கொண்டவர்கள். நாணயமானவராக இருப்பர்.
Previous Post Next Post