அத்திபழம்
பழங்களில்
மிகுந்த மருத்துவ குணம் கொண்டது, அத்திப்பழம்.
அத்தி களிமண் நிலம் மற்றும் ஆற்றுப்படுக்கைகளில் நன்கு வளரும். அத்திப்பழம் இரு
வகைப்படும். சீமை அத்தி என்பது Ficus Carica எனவும், நாட்டு அத்தி என்பது Racemosa எனவும் தாவரவியலில் குறிப்பிடபடுகிறது.
அத்தி பழம்
கொத்தாக செடியின் அடிப்பகுதியிலோ தண்டின் எப்பகுதியில் வேண்டுமானாலும் கிளைகள்
பிரியும் இடத்தில் தொங்கியபடி காணப்படும். ப்ரௌன், ஊதா, பச்சை, மஞ்சள், கருப்பு ஆகிய நிறங்களிலும் பல அளவுகளிலும்
உள்ளன. சுருக்கங்கள் நிறைந்த தோல் கொண்ட இந்தப் பழம் சீக்கிரம் அழுகிப்போகும்
தன்மை உடையதால், பெரும்பாலும்
காய்ந்த வடிவத்திலேயே கிடைக்கிறது.
சிலர் இந்த
பழத்தைப் பார்த்தாலே ஓடிவிடுவார்கள். ஆனால் இதில் உடலுக்கு ஆரோக்கியம் தரும் பைட்டோ நியூட்ரியன்ட்டுகளும்,
ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும்,
வைட்டமின்களும், தாதுக்களும் அத்திப் பழத்தில் அதிகமாக உள்ளன.
அத்தி பழம் உணவை விரைவில்
ஜீரணிக்கச் செய்து, சுறுசுறுப்பைத்தந்து,பித்தத்தை வியர்வை மூலம் வெளியாக்கி, ஈரல், நுரையீரலிலுள்ள தடுப்புகளையும் நீக்குகிறது.
அத்தி நல்ல
மணத்துடன் இருந்தாலும் பழத்தை அறுத்தால் அதற்குள் மெல்லிய பூச்சிகள், புழுக்கள் இருக்கும். அவற்றை நீக்கி
பதப்படுத்தாமல் உண்ண முடியாது. அத்திப்பழம் தின்பதால் வாய்நாற்றம் நீங்குவதுடன்
தலைமுடியும் நீளமாக வளர்கிறது.
அத்திப் பழம்
சர்க்கரை நோய், சர்க்கரைப் புண்,
உடல் வீக்கம், கட்டிகள் நீர்க்கட்டிகள், புண், சொறி சிரங்கு, நமைச்சல் போன்ற
பாதிப்புகள் உள்ளவர்களுக்கு அத்திப் பழம் மிகச் சிறந்த பலன் தருகிறது. மேலும் இவை
கல்லீரல் – மண்ணீரல்
அடைப்புகள், வீக்கங்களைப்
போக்கப் பயன்படுகிறது.
அத்திபழத்தில் வைட்டமின்களும்,
தாதுக்களும் நிறைய
இருக்கிறது.அத்திப் பழம் ஓர் ஒப்பற்ற மலமிளக்கியாகும் உலர்ந்த அத்திப் பழங்களை இரவு
தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் பழத்தை சாப்பிட்டு அந்த ஊற வைத்த
தண்ணீரையும் குடிக்க எத்தனை கடினமான மலமும் இறுகி வெளியேறும். இவ்வாறு 10-20 நாள் சாப்பிட உள்மூலம், வெளிமூலம், குடல் தள்ளல் ஆகிய நோய்கள் குணமாகும்.
அத்திப்பழத்தில்
நார்ச்சத்து அதிகம் உள்ளதால் உடல் எடையை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைய
உள்ள பழங்களை சாப்பிடுவதால் உடல் எடை வேகமாக குறையும்.
தொடர்ந்து
அத்திப்பழம் உட்கொண்டால் கொழுப்பு குறையும். அத்திப்பழத்தில் பெக்டின் என்ற கரைந்த
நார்ச்சத்து உள்ளது. இது உடலில் இருக்கும் கொழுப்பை வெளியேற்றுகிறது.
குடலைச்
சுத்தப்படுத்தி குடல் புற்றுநோய் வராமல் தடுக்கிறது. மார்பக புற்றுநோயை
அத்திப்பழம் தடுக்கிறது. அத்திப்பழங்களை பாலில் இரவு முழுவதும் ஊற வைத்து காலையில்
சாப்பிடுவதால் உடலின் சக்தியை அதிகப்படுத்துவதோடு, உடல் எடை அதிகரிக்கவும் செய்கிறது.
அத்திப்பழ
மரத்தின் இலைகளிலும் நார்ச்சத்து உள்ளதால் இலைகளை சாப்பிதுவதன் மூலம் இன்சுலின்
சுரப்பதை சீராக வைத்து கொள்ள முடியும். மேலும் வேகமாக ஜீரணம் ஆகிறது. இது மூல நோய்
வராமல் தடுக்க வழி செய்கிறது.
தினசரி 2 பழங்களைச் சாப்பிட்டால் உடலில் இரத்த உற்பத்தி
அதிகரிக்கும். உடலும் வளர்ச்சி அடைந்து பருமனடையும். மலச்சிக்கலை நீக்க உணவிற்குப்
பிறகு சிறிதளவு அத்தி விதைகளைச் சாப்பிடலாம்.