-->

சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

சித்திரை நட்சத்திரம் வாழ்க்கை முறை


சித்திரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : சித்திரை
சித்திரை நட்சத்திரத்தின் இராசி :
 கன்னி மற்றும் துலாம்
சித்திரை நட்சத்திரத்தின் அதிபதி :
 செவ்வாய்
சித்திரை நட்சத்திரம் முதல் மற்றும் இரண்டாம் பாத ராசி அதிபதி (கன்னி)
 : புதன்
சித்திரை நட்சத்திரம் மூன்று, நான்காம் பாத ராசி அதிபதி (துலாம்) : சுக்கிரன்

சித்திரை நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள்

சித்திரை அப்பன் தெருவிலே என்று பொதுவாக ஒரு பழமொழி உண்டு. பொதுவாக ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் இத் மாதிரி ஒரு பழமொழி உண்டு. ஆனால் அந்த பழமொழிக்கு எந்த ஆதாரமும் கிடையாது என்பதே உண்மை. எனவே இதை நினைத்து பயப்பட தேவையில்லை.

இவர்களுக்கு முன் கோபம் அதிகமிருக்கும்.
அழகிய உடல் அமைப்பை பெற்றவர்களாக இருப்பார்கள். சிறந்த ஒழக்க சீலர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு தெய்வ பக்தி மேலோங்கி இருக்கும். சொன்ன சொல்லை காப்பாற்ற எந்த எல்லைக்கும் போக துணிந்தவர்கள். நல்ல கூர்மையான அறிவு கொண்டவர்களாக இருப்பார்கள். வாசனை பொருட்களின் மேல் அதிக ஈடுபாடு இருக்கும்.

உடனிருப்பவர்கள் தவறு செய்தால் அதை கண்டித்து திருத்துவார்கள். சுறுசுறுப்பாக எதையாவது செய்து கொண்டே இருப்பார்கள். பிறருடைய விஷயங்களில் தேவையின்றி மூக்கை நுழைக்க மாட்டார்கள். தான் உண்டு தான் வேலை உண்டு என்று இருப்பார்கள். இவர்களுக்கு தைரியம் உடன் பிறந்ததாகும்.

சித்திரை முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் சிறந்த கல்வியறிவு கொண்டவர்கள். இயல்பாகவே இவர்கள் கடும் உழைப்பாளிகள். முடிவு எடுப்பதில் தெளிவாக இருக்க மாட்டார்கள். சரியான துண்டுகோல் இருந்தால் எதிலும் ஜெயிப்பார்கள்.

சித்திரை இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள்:

இவர்கள் நீதி நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள். தெய்வபக்தி அதிகம் இருக்கும். இவர்கள் சஞ்சலமான மனம் கொண்டவர்களாக இருப்பார்கள். நல்ல உயரமானவராகவும் இருப்பார்கள்.

சித்திரை மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள்:

இவர்கள் நல்லதையே நினைத்து நல்லதையே செய்யும் குணமுள்ளவர்கள். நல்ல தைரியமுள்ளவர். உதவும் குணம் கொண்டவர்கள். குடும்பத்தை அதிகமாய் நேசிப்பார்கள்.

சித்திரை நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள்:

இவர்கள் எதிரிகளை எளிதில் வெற்றி கொள்ளுவர். சுயமாக முடிவு எடுப்பதில் வல்லவர்கள். இவர்களுக்கு நல்ல பேச்சாற்றல் இருக்கும். எடுத்து கொண்ட காரியத்தை எப்பாடுபட்டாவது முடித்து விடுவார்கள். கோப குணம் உள்ளவர்கள்.
Previous Post Next Post