-->

இவ்ளோ நாள் தெரியாம போச்சே! இந்த பழத்துல இவ்வளவு நன்மைகள் இருக்கா?

எழுமிச்சை பழம்

நமது நாட்டில் அனைத்து நல்ல காரியங்களிலும்  முதல் இடம் வகிக்கும் பழம் தான் எலுமிச்சை. குறைந்த விலையில் எல்லா சத்துக்களும் நிறைந்த பழங்களில் எலுமிச்சையும் ஒன்று.

எலுமிச்சம் பழ சாற்றில் 5 சதவீதம் அளவுக்கு சிட்ரிக் அமிலம் உண்டு. இதனால் இது புளிப்பு சுவை தருகிறது.இதில் உள்ள புளிப்பு சுவை ஜீரணத்தை தூண்டி உணவை நன்கு செரிக்க செய்கிறது. 

கோடை காலங்களில் ஏற்படும் தாகத்தை தணிக்க எலுமிச்சை பழம் பயன்படுகிறது. நோய் வராமல் தடுத்து, உடல் நலத்தை காக்கக்கூடிய பல சத்துக்கள் எலுமிச்சம் பழத்தில் அடங்கியுள்ளது.

உடல் கழிவுகளை எளிதாக வெளியேற்றும் தன்மையும், புளிப்பு சுவைக்கு உண்டு. எலுமிச்சை புளிப்பு சுவையுடையதாக இருந்தாலும், இதில் காரத்தன்மையும் இருக்கிறது. அதனால் ரத்தத்தை தூய்மை செய்யும் சிறப்பு இதில் இருக்கிறது

எலுமிச்சை பழத்தில் உள்ள ``சிட்ரிக் அமிலம்'' நோய் எதிர்ப்பு சக்தி நிறைந்ததாக இருப்பதால் சளி, இருமல், தொண்டை வலி போன்றவைகளுக்கு நல்ல மருந்தாகிறது. மஞ்சள்காமாலை நோய்களுக்கும் இது சிறந்த மருந்தாக பயன்படுகிறது.

எலுமிச்சை பழத்தின் மருத்துவ குணங்கள்...

எலுமிச்சை பழத்தில் உள்ள அதிகபடியான வைட்டமின் ‘’சி’’ சத்தும், ரிபோப்ளோவினும் புண்களை ஆற்ற வல்லது. எலுமிச்சை சாறுடன் நீர் கலந்து சிட்டிகை உப்பு போட்டு தொண்டையில் படுமாறு பலமுறை கொப்பளிக்க, தொண்டை புண், வாய்ப்புண் ஆறும். ** கல்லீரலுக்கு சிறந்தது: 

எலுமிச்சை சாறுடன்ஞ்சி சாறு, சிறிதளவு தேன் சேர்த்து, வெதுவெதுப்பான நீரில் கலந்து சாப்பிட விரைவில் செரிமான  பிரச்சனை,வாந்தி,குமட்டல், நெஞ்செரிச்சல், ஏப்பம், வயிறு உப்புசம் குறையும். ஜீரண சக்தியும் அதிகரிக்கும்.
பித்தநீர் சரியான அனவில் சுரக்க வழிசெய்கிறது. பித்தப்பையில் ஏற்படும் கற்களைக் கரைக்க உதவுகிறது.எலுமிச்சை பழ சாற்றை “லிவர் டானிக்”என்று மருத்துவர்கள் அழைக்கிறார்கள்.எலுமிச்சை பழ சாற்றை குடிப்பதன் மூலம் உடலில் உள்ள தேவயற்ற கழிவுகள் வெளியேற்றபடுகிறது.
ஒரு கப் சூடான காபி அல்லது தேநீரில் ஒரு எலுமிச்சம் பழத்தை பாதியாக நறுக்கி, அரைமூடியை பிழிந்து சாறு கலந்து அருந்தி வந்தால் தலைவலி குணமாகும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் இளஞ்சூடான நீரில் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேனுடன் பருகி வர உடல் எடை குறையும். 

எலுமிச்சம் பழச் சாறை உடலில் தேய்த்து குளித்தால் உடல் வறட்சி நீங்கும். மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும். மாதவிலக்கின் போது உண்டாகும் வலியைக் குறைக்கும். அளவிற்கு மீறி பேதியானால் ஒரு எலுமிச்சை பழச்சாற்றை அரை டம்ளர் நீரில் கலந்து கொடுத்தால் உடனடியாக பேதி நின்றுவிடும்.எலுமிச்சை பழத்தை பாதியாக அறிந்து அதில் நடுவில் கிராம்பினை வைப்பதின் மூலம் கொசுவை விரட்ட முடியும்.


Previous Post Next Post