கிரீன் டீ
இன்றைய நவீன
வாழ்க்கை முறையில் கிரீன் டீயை பற்றி தெரியாதவர்கள் இருக்க முடியாது. உலகம்
முழுவதும் அனைத்து மக்களும் விரும்பும் ஒரு ஆரோக்கியமான டீ கிரீன் டீ ஆகத் தான்
இருக்கும். சாதாரண டீ, காபி, பால் குடிப்பதை விட கிரீன் டீ குடிப்பது
மிகவும் நல்லது என்பது பெரும்பாலோரின் கருத்து.
உலகிலேயே
ஜப்பானியர்கள் தான் கிரீன் டீயை அதிகம் பருகுகிறார்கள். அதனால் தான் அவர்கள் இளைமையுடனும், ஆரோக்கியத்துடனும்
இருக்கிறார்கள். அதற்கு கிரீன் டீயில் அடங்கியுள்ள சத்துக்களே காரணம்.
கிரீன் டீயினால் கிடைக்கும் நன்மைகள்....
கிரீன் டீயானது
உடல் எடையை குறைக்கவும், சரியான அளவிலான
உடல் எடையை பராமரிக்கவும் பெரிதும் பயன்படுகிறது. நரம்பு சம்பந்தமான நோய்களை
தடுப்பதுடன், இதயம்
சம்மந்தமான் நோய்கள் வராமலும் இது பாதுக்காக்கிறது. கிரீன் டீயை வெறும் வயிற்றில்
எப்போது அருந்தவே கூடாது. ஏனென்றால், அது வயிற்றுக்கு தேவையில்லாத சங்கடங்களை கொடுக்கும்.
உணவு
சாப்பிட்டவுடன் கிரீன் டீ குடித்தால் அது நாம் சாப்பிட்ட சாப்பாட்டின்
ஊட்டசத்துகளை நம் உடலில் சரியாக சேர விடாது மற்றும் சாப்பிட்ட உணவு செரிமானம்
ஆவதிலும் பிரச்சனைகள் ஏற்படலாம். அதனால் எப்போதும் உணவு சாப்பிட்ட 30 நிமிடங்கள் கழித்து கிரீன் டீ குடிக்கலாம்.
கிரீன் டீயைத்
தினமும் இரு வேளைகள் பருகிவருவதால், பல் மற்றும் எலும்புகளுக்குத் தேவையான பலம் கிடைக்கும். உடல் எடையைக் குறைப்பதில்
கிரீன் டீ முக்கியப் பங்காற்றுகிறது. கிரீன் டீ பருகுவதால் உடலில் உள்ள கலோரிகள்
எரிக்கப்பட்டு தேவையற்ற கொழுப்புகள் கரையும்.
இதில் ஆன்டிஆக்ஸிடன்ட்
நிறைவாக உள்ளது. நோய் எதிர்ப்புச் சக்தியை அதிகரிக்கச் செய்யும். பெருங்குடல்
பகுதியில் வரும் புற்றுநோயைத் தடுக்கும். கிரீன் டீ, சருமப் பராமரிப்புக்குக் காரணமான மெலனின்
உற்பத்தியைத் தூண்டும் தன்மை கொண்டது. சர்க்கரையின் அளவை கட்டுக்குள் வைத்திருக்க கிரீன் டீ பெரிதும் உதவுகிறது.
ரத்தத்தில்
குளுக்கோஸ் கலக்கும் வேகத்தை கிரீன் டீ கட்டுப்படுத்தும். கிரீன் டீயில் தயமின்
எனும் வைட்டமின் பி காம்ப்ளெக்ஸ் அதிகம் உள்ளது. தொடர்ந்து கிரீன் டீ
அருந்தும்போது, இதய ரத்தக்
குழாய்களில் சேரும் கொலஸ்ட்ரால் அளவு குறைந்து, மாரடைப்பு ஏற்படும் வாய்ப்புகள் குறையும். கிரீன் டீ குடிப்பதன் மூலம் வாய் துர்நாற்றத்தை தவிர்க்கலாம்.