-->

ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் வாழ்க்கை அமைப்பு

ஹஸ்தம் நட்சத்திரம் வாழ்க்கை முறை

ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் குணாதசியங்கள்


நட்சத்திரம் : ஹஸ்தம்
ஹஸ்தம் நட்சத்திரத்தின் ராசி : கன்னி
ஹஸ்தம் நட்சத்திரத்தின் அதிபதி : சந்திரன்
ஹஸ்தம் நட்சத்திரத்தின் ராசி அதிபதி :
 புதன்

ஹஸ்தம் நட்சத்திரத்தின் பொதுவான குணங்கள் :

ஹஸ்தம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அழகான முகமும் வசீகரமான உடலமைப்பும் இருக்கும். எப்பொழுதும் தேனீக்களை போல சுறுசுறுப்பாக இருப்பார்கள். இவர்கள் நகைச்சுவையுணர்வு கொண்டவர்களாக இருப்பார்கள். எளிதில் உணர்ச்சி வசபடககூடியவர்கள்.

மற்றவர்களுக்கு உதவி செய்ய கூடிய மனப்பான்மை கொண்டவர்கள். இவர்களுக்கு வெகுளியான குணமிருக்கும். பண விஷயத்தில் சிக்கனமாக இருப்பார்கள். இயற்கையை ரசிக்கும் குணமிருக்கும். தாய், தந்தை சொல்லை மதித்து நடப்பார்கள். எடுத்த காரியங்களை எப்பாடுபட்டாவது முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள்.

இவர்கள் நல்ல பேச்சுதிறமை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்களுக்கு நிர்வாக திறமை இயல்பாகவே இருக்கும். மனம் விரும்பாத காரியத்தை செய்ய மாட்டார்கள், இவர்களிடம் தன்னம்பிகை அதிகமாக இருக்கும். பொறுமையாக இருந்து காரியங்கள் சாதிப்பதில் வல்லவர்கள்.

ஹஸ்தம் முதல் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் மனதில் பட்டதை வெளிப்படையாக பேசுவார்கள். வீண் பந்தா செய்ய மாட்டார்கள். பொய் பேசுவதை விரும்ப மாட்டார்கள். பொதுவாக நல்லவர்கள்.

ஹஸ்தம் இரண்டாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் கவர்ச்சியாக இருப்பதை விரும்புவார்கள். கேளிக்கைகளில் விருப்பம் உள்ளவர். இவர்கள் பயந்த சுபாவம் உள்ளவர்களாக இருப்பார்கள். நீதி, நேர்மைக்கு கட்டுப்பட்டவர்கள்.

ஹஸ்தம் மூன்றாம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் நேர்மையான குணத்தை கொண்டவர்கள். எதாவது புதிதாக காற்று கொள்ள வேண்டும் என நினைப்பவர்கள். பேச்சு திறமை அதிகம் இருக்கும். கலைகளில் ஈடுபாடு அதிகம்.

ஹஸ்தம் நான்காம் பாதத்தில் பிறந்தவர்கள் :

இவர்கள் மனம் என்ன சொல்கிறதே அதன்படி வாழ விரும்புவார்கள். ஆசா, பாசம், அதிகம் உள்ளவர்கள். இவர்கள் நல்ல உயரமானவராக இருப்பார்கள். எப்பொழுதும் சந்தோஷமாக இருப்பதை விரும்புவர். இவர்களுக்கு தலைமை தாங்கும் பண்பு உண்டு.
Previous Post Next Post