இடுப்பு வலி
முன்பெல்லாம் இடுப்பு வலி என்பது
வயதானவர்கள் சிலருக்கே வரக்கூடிய ஒரு வலியாக இருந்தது.ஆனால் இப்போது அனைத்து
வயதினருக்கும் எளிதில் வரக்கூடிய ஒன்றாக மாறியுள்ளது.
தகவல் தொழில்நுட்ப துறையில் வேலை
செய்யும் பலரும் இடுப்பு வலியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.காரணம் அவர்கள் உடலுழைப்பு
இல்லாமல் நீண்ட நேரம் கணினி முன் அமர்ந்த நிலையிலேயே வேலை பார்ப்பதுதான்.
நாம் வேலைகளில் ஈடுபடும்போதும் பிரயாணம்
மேற்கொள்ளும்போதும் தொடர்ந்து உட்கார்ந்து இருக்காமல் ஒரு தடவையாவது எழுந்து
முதுகை நிமிர்த்தி சிறிது தூரம் நடந்து சென்ற பின் மீண்டும் உட்காருவது அவசியம்.
உட்காரும் போது முதுகை வளைத்து சொகுசாக உட்கார வேண்டாம். செங்குத்தாக முதுகை
நிமிர்த்தி அதை 90 டிகிரியில் வைத்தும்
உட்காருவதும் கூடாது.
இடுப்பு வழியை
குணபடுத்த சில வழிகள்....
கொள்ளு பல பிரச்னைகளைத் தீர்க்கும் ஒரு இயற்கை உணவுப் பொருள்.
கொள்ளு ரசம் வைத்து குடிக்க இடுப்பு வலி பறந்து போகும்.
உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.
உடல் பருமனாக உள்ளவர்கள் கொள்ளை வாரம் மூன்று முறை சேர்க்க உடல் தசைகள் இறுகி, ஒரு ஆரோக்கியமான உடல் வாகை பெற முடியும். உடலில் தேவையற்ற நீரை வெளியேற்றுகிறது.
அரை தம்ளர் தண்ணீரில் ஒரு கரண்டி அளவு ஓமம் சேர்த்து
அதில் 100 மிலி தேங்காய் எண்ணெய்யை சேர்த்து கொதிக்க வைத்து வடிகட்டி
கொள்ள வேண்டும்.பிறகு அவற்றுடன் கற்பூரப் பொடியை சேர்த்து இளஞ்சூடாக இருக்கும்
போது தேய்க்க இடுப்பு வலி இல்லாமல் போவதை
காணலாம்.
முருங்கைப் பட்டை, சுக்கு இவை இரண்டையும் சேர்த்து நன்றாக அரைத்து மேலே
பூச வலி விரைவில் குணமாகும்.
நல்லெண்ணையில் மருதாணி இலையை போட்டு காய்ச்சி வலி உள்ள இடத்தில தடவி வந்தால் வழியானது மெதுவாக குறைய தொடங்கும்.
மாதவிடாய் காலங்களில் பெண்களுக்கு வயிற்று வலியும்
இடுப்பு வலியும் ஏற்படுவது இயற்கை. இந்த வலிகளைப் போக்க வெந்தயத்துடன் நூறு கிராம்
அளவுக்கு வெந்தயத்தை நன்றாக பொடியாக்கி, அதில் இருநூறு கிராம் சர்க்கரையை கலந்து சாப்பிட
வயிற்றுவலி,
இடுப்பு வலி நீங்கும்.
வெள்ளைப் பூண்டுடன் கருப்பட்டியை கலந்து சாப்பிட
இடுப்புவலி பெருமளவு குறைந்துவிடும்.
நீங்கள் ஹைஹீல்ஸ் அணியும் பழக்கமுள்ளவர் எனில் அதன்
மூலம் கூட உங்களுக்கு இடுப்பு வலி ஏற்பட வாய்ப்புள்ளது. அதிக உயரமுள்ள குதிகால்
உடைய செருப்புகளை அணிவதை தவிர்க்க வேண்டும்.